சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடையால் நிம்மதி போச்சு: தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை ஒடையகுளம் குப்பிச்சிபுதுார் அண்ணா நகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். அவரது மனைவி சீனியம்மாள். இருவரும் தங்கள் மகன், மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன்வந்து, நேற்று காலை சப் - கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில், பொதுமக்கள்
 இறைச்சி கடையால் நிம்மதி போச்சு: தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை ஒடையகுளம் குப்பிச்சிபுதுார் அண்ணா நகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். அவரது மனைவி சீனியம்மாள். இருவரும் தங்கள் மகன், மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன்வந்து, நேற்று காலை சப் - கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் நடந்து கொண்டிருந்த போது, இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பஞ்சலிங்கத்தின் வீடு முன், இறைச்சிக்கடை செயல்படுவதாகவும், கடையில் இருந்து வரும் துர்நாற்றம், ஈக்களால் சுகாதாரம் சீர்கெடுவதுடன், இறைச்சிக்கழிவுகளுக்கு சண்டையிட்டுக் கொள்ளும் நாய்களால், குழந்தைகள் வெளியில் செல்லவே அஞ்சும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், கடையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மனம் நொந்து, குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார்.போலீசார் மற்றும் சப் - கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவர்களை சமாதனம் செய்து, பிரச்னை குறித்த மனுவை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X