பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : அக் 12, 2021
Share
Advertisement
தேயிலையில் கொப்பள நோய்வால்பாறையில், 25 ஆயிரம் எக்டர் பரப்பில் தேயிலையும், சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை விடைபெறும் நிலையில், கடந்த சில நாட்களாக, சாரல்மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் தேயிலை செடிகளில், கொப்பள நோய் தாக்குதலால், உற்பத்தி குறைந்து

தேயிலையில் கொப்பள நோய்வால்பாறையில், 25 ஆயிரம் எக்டர் பரப்பில் தேயிலையும், சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை விடைபெறும் நிலையில், கடந்த சில நாட்களாக, சாரல்மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் தேயிலை செடிகளில், கொப்பள நோய் தாக்குதலால், உற்பத்தி குறைந்து வருகிறது.தேயிலை தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தேயிலை செடிகள் கொப்பள நோய் தாக்குதலால், தேயிலை மீண்டும் துளிர்விடாமல் உள்ளது. கொப்பள நோய் தாக்குதலில் இருந்து, தேயிலை செடிகளை பாதுகாக்க, உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்களின் அறிவுரை படி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. அதேபோல், தேயிலை செடிகளுக்கு இடையே முளைத்துள்ள களைகளை ஒழிக்கவும், மருந்து தெளிக்கப்படுகிறது,' என்றனர்.ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்புகிணத்துக்கடவுஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், இரண்டு முதல், எட்டு கிராமங்கள் உள்ளன. தற்போது, பெரும்பாலான கிராமங்களில், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஊராட்சி நிர்வாகங்களால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருந்தும் மக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். தவிர, ஒவ்வொரு கிராமத்திலும் செயல்படாத ஆழ்துளை கிணறுகள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளின் அருகில் 'சோக்பிட்' அமைத்து, மழை நீரை பூமிக்குள் செலுத்தி, ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில், அமைக்கப்பட்ட சிறு குட்டைகளும் துார்வாரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த இரண்டு பணிகளும், மழை நீரை சேமிக்க கைகொடுக்கும், என, ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் தேர்வுவால்பாறை தாலுகா ஐ.என்.டி.யு.சி.,தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம், பொதுச்செயலாளர் கருப்பையா தலைமையில் நடந்தது. சங்கத்தின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.சங்கத்தின் புதிய தலைவராக ராமசந்திரன் (கெஜமுடி), பொதுச்செயலாளராக கருப்பையா (வால்பாறை), பொருளாளராக பாஸ்கரன் (வாட்டர்பால்ஸ்), செயலாளராக மணி (முருகாளி), துணைத்தலைவர்களாக காளியப்பன், ஹரிகிருஷ்ணன், காத்தழகு, இணைச் செயலாளர்களாக டேனியல், ராஜேந்திரன், சண்முகவேல் ஆகியோர், போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சங்கத்திற்கு எதிராக யாரேனும் தவறான தகவல் பரப்பினால், அவர்களை சங்க பொறுப்பில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, தெரிவிக்கப்பட்டது.மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் கடந்த, ஒரு வாரமாக அதிவேக காற்றுடன் கனமழை பெய்கிறது. இதனால், பல இடங்களில் ரோட்டோர மரங்கள் சாய்ந்து வருகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் வாழைக்கொம்புநாகூர் பிரிவு அருகே, மயில் கொன்றை மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அகற்றினர்.இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதித்தது. இதேபோல், பில்சின்னாம்பாளையம் மற்றும் ஆழியாறு அருகே இரண்டு வாரங்களுக்கு முன், ரோட்டில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.பல மாதங்களாக ரோட்டோரத்தில் வலுவிழந்த மரங்கள், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் தொங்கிக்கொண்டுள்ள மரக்கிளைகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.விபத்துக்களை தவிர்க்க ரோட்டோரத்தில் வலுவிழந்த மரக்கிளைகள் மற்றும் மரங்களை வெட்டி அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதிப்பீட்டு வினாக்கள் தயாரிப்புஉடுமலை அடுத்த திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி பயிற்சி நிறுவனம், 3 மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில், கடினமானப் பகுதிகளை எளிதாக புரியும் வகையில் காணொலி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இப்பணியில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், மூன்றாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கான செயல்திட்ட வழிக்கற்றல் மதிப்பீட்டு வினாக்கள் தயாரிப்பு பணிமனையை பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் சங்கர், துவக்கி வைத்தார்.விரிவுரையாளர் ராஜா, மதிப்பீட்டு வினாக்கள் தயாரிப்பது குறித்தும், காணொலி தயாரித்தல் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கினார்.ஓய்வூதியர் சங்க பேரவை மாநாடுதமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5வது வட்ட பேரவை மாநாடு,மடத்துக்குளத்தில் வட்டக்கிளைத்தலைவர் சவுந்திராஜன் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் கருணாநிதி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம், 9,000 ரூபாயும், தமிழக அரசு வழங்கும் 7,850 ரூபாயும் தர வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட் டம் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு 300, அகவிலைப்படி வழங்க வேண்டும்.மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும், மாவட்டத்தலைநகரான திருப்பூரில் இருந்து தாலுகா தலைநகரம் மடத்துக்குளத்திற்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகைச்சுவை விழிப்புணர்வு நிகழ்ச்சிஉடுமலை அடுத்த அந்தியூர், கமலம் கலை கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில் நகைச்சுவை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் லட்சுமிபிரியா, தலைமை வகித்தார்.கல்லுாரி செயலர் சஞ்சீவ், முன்னிலை வகித்தார். அகில இந்திய வானொலி நிலையத்தைச் சேர்ந்த தங்கவேலு, பங்கேற்றார். இதையடுத்து, அவர், நாகரீக உலகில் துன்பம் இன்றி வாழ்க்கை நடத்த சிரிப்பே மருந்து என, விளக்கிப் பேசினார். பேராசிரியர்கள் கணேஷ்குமார், வைரமுத்து ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பந்தல் சாகுபடியில் நஷ்டம்குடிமங்கலம் வட்டாரத்தில், பந்தல் சாகுபடி முறையில், நடப்பு சீசனில், பீர்க்கன் செடிகள், போதியளவு பூக்கள் விடாமல், காய்ப்பு திறன் இல்லாமல், மகசூல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதுகுறைந்தளவு விளையும் காய்களும், தரமில்லாமல், உள்ளது. இதனால், ஒரு ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'பந்தல் சாகுபடியில் நிலவும் பிரச்னை குறித்து, தோட்டக்கலைத்துறையினர் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். விதையின் தரம், முளைப்பு திறன் உட்பட பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்து, உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்''இடுபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் தட்டுப்பாடு உட்பட காரணங்களால், சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X