1.16 லட்சம் மரக்கன்றுகள் இருப்பு: நடவு செய்ய அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1.16 லட்சம் மரக்கன்றுகள் இருப்பு: நடவு செய்ய அழைப்பு

Added : அக் 12, 2021
Share
உடுமலை:வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், இத்திட்டத்தின் கீழ், 49 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால்,
 1.16 லட்சம் மரக்கன்றுகள் இருப்பு: நடவு செய்ய அழைப்பு

உடுமலை:வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், இத்திட்டத்தின் கீழ், 49 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.திருப்பூர் மாவட்ட எல்லையான, ஆவலப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் மற்றும் மயான பகுதிகளில், பூவரசன், வேம்பு, புங்கன், நாவல், வாகை, தான்றி, சிசு, கடுக்காய், புளி, வன்னி , விளா என பல்வேறு வகையான, மண்ணின் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.ஊராட்சித்தலைவர் கணேஷ்பிரபு, தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், விஜயராஜ், தமிழ், முருகானந்தம், சோமு ராஜசேகர், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், குளம், குட்டைகளின் கரைகள், பூங்காக்கள், தொழில் நிறுவன வளாகங்கள் என அனைத்து பகுதிகளிலும் இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.தற்போது, வேம்பு, மலைவேம்பு, நெல்லி, மந்தாரை, மாதுளை, சீதா, செம்மரம், தேக்கு, நாட்டுப்பலா, மூங்கில், ஈட்டி, கருமருது, வேங்கை, பனை, கொய்யா, எலுமிச்சை, ஆயன், ஆவி என மண்ணின் பாரம்பரிய மரங்களும், பழவகை என, 49 வகையான, 1.16 லட்சம் மரக்கன்றுகள் இன்னும் இருப்பு உள்ளது.எனவே, மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X