பொது செய்தி

தமிழ்நாடு

ரோடுகளை புதுப்பிக்க வேண்டுகோள்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை அடுத்த, திவான்சாபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகள் சிதிலமடைந்துள்ளதால், புதுப்பிக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை அடுத்த, திவான்சாபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆலாங்கடவு, மீனாட்சிபுரம் - கோபாலபுரம் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஆலாங்கடவு ரோடு

ஆனைமலை:ஆனைமலை அடுத்த, திவான்சாபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகள் சிதிலமடைந்துள்ளதால், புதுப்பிக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை அடுத்த, திவான்சாபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆலாங்கடவு, மீனாட்சிபுரம் - கோபாலபுரம் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஆலாங்கடவு ரோடு சீரமைக்கப்பட்டது.அதேபோன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன், மீனாட்சிபுரம் - கோபாலபுரம் ரோடு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், தரமற்ற முறையில் பணி மேற்கொள்ளப்பட்டதால் தற்போது, ரோடு சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது.மழைநீர் தேங்கி நிற்பதுடன், வாகன ஓட்டுனர் தடுமாறி விழும் அவல நிலை நீடிக்கிறது. தரமான முறையில் ரோடுகளை புதுப்பிக்க வேண்டுமென, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்கள் கூறுகையில், மீனாட்சிபுரம் - கோபாலபுரம் ரோடு இரு மாநில எல்லையில் உள்ளது. இதில், தமிழகத்துக்கு உட்பட்ட பகுதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. அதேபோன்று, ஆலாங்கடவு ரோடும் சீரமைக்கப்படமால் உள்ளது. மக்கள் பயன்பாடு அதிகமுள்ள இந்த ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X