ஒரு போன் போதுமே! தெருவிளக்குகள் தரமில்லை

Added : அக் 12, 2021
Share
Advertisement
ஆனைமலை மக்கள் சக்தி நகரில் தரமான தெருவிளக்குகள் அமைக்காததால், அடிக்கடி பழுதடைந்து, குடியிருப்பில் இருள் சூழ்ந்து மக்கள் இரவில் அவதிக்கு உள்ளாகின்றனர். தரமான விளக்குகள் பொருத்த வேண்டும்.எம்.செல்வராஜ், ஆனைமலை.ரோடெல்லாம் ஜல்லிக்கற்கள்பொள்ளாச்சி திலகர் வீதி மற்றும் ராமகிருஷ்ணாபுரம் வீதி ஆகியவற்றில், ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் பரப்பியுள்ளனர். பணியை பல மாதங்களாக

ஆனைமலை மக்கள் சக்தி நகரில் தரமான தெருவிளக்குகள் அமைக்காததால், அடிக்கடி பழுதடைந்து, குடியிருப்பில் இருள் சூழ்ந்து மக்கள் இரவில் அவதிக்கு உள்ளாகின்றனர். தரமான விளக்குகள் பொருத்த வேண்டும்.எம்.செல்வராஜ், ஆனைமலை.
ரோடெல்லாம் ஜல்லிக்கற்கள்
பொள்ளாச்சி திலகர் வீதி மற்றும் ராமகிருஷ்ணாபுரம் வீதி ஆகியவற்றில், ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் பரப்பியுள்ளனர். பணியை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதால், முதியவர்கள் நிலைதடுமாறி விழும் அவலம் நிலவுகிறது.என்.பிரேம்நசீர், பொள்ளாச்சி.
சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், பாதுகாப்பின்மை நிலவுகிறது. உடனடியாக சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.இளங்கோ, வடசித்துார்.
காட்டுயானைகளால் அச்சம்
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ளது. தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைகள் முகாமிடுவதை தவிர்க்க, குடியிருப்பை சுற்றிலும் மின் வேலி அமைக்க வேண்டும்.-மு.அஜய், தோணிமுடி எஸ்டேட்.
மாசடையும் நீராதாரங்கள்
ஆனைமலை - உடுமலை ரோட்டில், நா.மூ.சுங்கம் அருகிலுள்ள பாலத்தில், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும், ஜல்லிபட்டி அருகிலுள்ள பாலத்தில் குப்பை கழிவும் கொட்டப்படுகிறது. நீராதாரம் மாசடைவதை தடுக்க வேண்டும்.எம்.கிருபாகரன், நா.மூ.சுங்கம்.
ஒளிர்வது எப்போது?
மடத்துக்குளம் தாலுகா கணியூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள கோபுர விளக்கு ஒளிர்வது இல்லை. இதனால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில், வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.ஆர்.கண்ணன், கணியூர், மடத்துக்குளம்.
வேகத்தடை வேண்டும்
மடத்துக்குளம் தாலுகா, மேற்கு நீலம்பூர் பஸ் ஸ்டாப்பிலிருந்து ஊருக்குள் செல்லும் ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.டி. சாமி, நீலம்பூர், மடத்துக்குளம்.
விபத்து ஏற்பட வாய்ப்பு
உடுமலை கழுத்தறுத்தான் பள்ளம் பாலம் அருகில், பெட்ரோல் பங்க் முன், பாதாளச்சாக்கடை ஆளிறங்கும் குழி மூடி ரோட்டிலிருந்து உயரமாக உள்ளதால், விபத்துகள் ஏற்படுகிறது.ஆர்.சீனிவாசன், உடுமலை.பராமரிப்பு இல்லைஉடுமலையில் அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் தாலுகா அலுவலகத்தில், கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை சரிசெய்ய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.சம்பத், உடுமலை.இடியும் நிலையில் பாலம்உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகே, மழை நீர் ஓடைமீதுள்ள தரைமட்டப்பாலம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையிலுள்ளது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.முருகன், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X