டாஸ்மாக் கடைகளால் தொல்லை போலீஸ் பாதுகாப்பு தேவை| Dinamalar

'டாஸ்மாக்' கடைகளால் தொல்லை போலீஸ் பாதுகாப்பு தேவை

Added : அக் 12, 2021
Share
சென்னை புறநகர் பகுதியில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளில், உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்காக, 4 முதல் 6ம் தேதி வரை, உள்ளாட்சி அமைப்பு எல்லையில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, அரசு உத்தரவிட்டது. இதனால், மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், பரங்கிமலை, துரைப்பாக்கம், நீலாங்கரை, கானத்துார், தரமணி போன்ற

சென்னை புறநகர் பகுதியில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளில், உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதற்காக, 4 முதல் 6ம் தேதி வரை, உள்ளாட்சி அமைப்பு எல்லையில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, அரசு உத்தரவிட்டது. இதனால், மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், பரங்கிமலை, துரைப்பாக்கம், நீலாங்கரை, கானத்துார், தரமணி போன்ற பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

அங்குள்ள மது பிரியர்கள், திருவான்மியூர், வேளச்சேரி, அடையாறு, கிண்டி பகுதியில் உள்ள கடைகளுக்கு படையெடுத்தனர்.இதனால், கடைகள் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல், குடியிருப்பு வாசலில் நின்று மது அருந்தியது என, போதை ஆசாமிகளால், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.ஓட்டு எண்ணிக்கை நாளான, 12ம் தேதியும், இதே போன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால், அன்று, எல்லையில் திறந்திருக்கும், டாஸ்மாக் கடை அருகில், போலீஸ் ரோந்து வாகனம் நிறுத்தி, கண்காணித்து, அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X