பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்பு 

Added : அக் 12, 2021
Share
Advertisement
வால்பாறை,:தேயிலை தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஆண்டு தோறும் தீபாவளி பண்டிக்கைக்கு போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், தீபாவளி போனஸ் கேட்டு தொழிலாளர்கள் பல்வேறு

வால்பாறை,:தேயிலை தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஆண்டு தோறும் தீபாவளி பண்டிக்கைக்கு போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், தீபாவளி போனஸ் கேட்டு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்பின், தொழிற்சங்கங்கள் வாயிலாக பேச்சு நடத்தி, போனஸ் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், நேற்று வரை போனஸ் குறித்த பேச்சு வார்த்தை நடக்கவில்லை. எஸ்டேட் நிர்வாகங்கள் தரப்பில், பேச்சு நடத்தி, போனஸ் சதவீதம் இறுதி செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலாளர் மோகன், எஸ்டேட் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'வால்பாறை மலைப்பகுதியில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ், 20 சதவீதம் வழங்க வேண்டும். பண்டிகைக்கு, 15 நாட்களுக்கு முன், தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். அதற்கு முன் தொழிற்சங்கங்களை,எஸ்டேட் நிர்வாகங்கள்பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X