தொடரும் மழை பொழிவு: கொப்பரை வரத்து குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் மழை பொழிவு: கொப்பரை வரத்து குறைவு

Added : அக் 12, 2021
Share
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து பெரும் அளவு குறைந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 98 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 92.30 முதல், 97.20 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 72 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 74.20
 தொடரும் மழை பொழிவு: கொப்பரை வரத்து குறைவு

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து பெரும் அளவு குறைந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 98 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 92.30 முதல், 97.20 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 72 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 74.20 முதல், 88 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 170 கொப்பரை மூட்டைகளை, 39 விவசாயிகள் கொண்டு வந்தனர், 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை, 287 மூட்டைகள் வரத்து குறைந்தது. கொப்பரை கிலோவுக்கு, 80 பைசா அதிகரித்தது. மழை பெய்வதால், கொப்பரை உலர வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, வரத்து குறைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X