பொது செய்தி

தமிழ்நாடு

'பார்க்கிங்' ஏரியாவான 'பை-பாஸ்' ரோடு: பஸ் ஸ்டாண்டிலும் அவலம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
உடுமலை:பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிரியும் பை-பாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும், தேசிய நெடுஞ்சாலையில், இணைகிறது.பொள்ளாச்சி, தாராபுரம், திருப்பூர், செஞ்சேரிமலை உட்பட தேசிய, மாநில நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும்,
 'பார்க்கிங்' ஏரியாவான 'பை-பாஸ்' ரோடு: பஸ் ஸ்டாண்டிலும் அவலம்

உடுமலை:பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிரியும் பை-பாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும், தேசிய நெடுஞ்சாலையில், இணைகிறது.பொள்ளாச்சி, தாராபுரம், திருப்பூர், செஞ்சேரிமலை உட்பட தேசிய, மாநில நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும், பை-பாஸ் ரோட்டின் வழியாகவே பழநி உட்பட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
அனைத்து நேரங்களிலும், போக்குவரத்து உள்ள ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகே, 'பார்க்கிங்' விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.குறிப்பாக, ரோட்டிலுள்ள, கடைகள் முன், டூ வீலர்கள் மற்றும் கார்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. ரோட்டின் மீது நிறுத்தப்படும் வாகனங்களால் பிற வாகனங்கள் பை-பாஸ் ரோட்டில், செல்ல முடிவதில்லை.பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்து வரும், பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள், உள்ளே நுழையும் இடத்தில், திரும்ப போதிய இடம் இல்லாத அளவுக்கு, வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள், பை-பாஸ் ரோட்டில் வரும் வாகனங்களை கவனிக்காமல், திரும்புவதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.நெடுஞ்சாலைத்துறை சார்பில், பை-பாஸ் ரோட்டில், கடைகள் முன்புள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; போக்குவரத்து போலீசார், 'பார்க்கிங்' கயிறுகள் அமைத்து ஒழுங்குபடுத்தினால் மட்டுமே நகரின் முக்கிய ரோட்டில், நெரிசல் குறையும் என பல முறை வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதே போல், பஸ் ஸ்டாண்டுக்குள், விதிகளை மீறி, டூவீலர்களில், அதிவேகத்தில் சென்று பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்.மேலும், பஸ் நிறுத்தப்படும், 'ரேக்' பகுதியிலேயே வாகனங்களை நிறுத்திச்செல்லும் அவல நிலையும் உள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X