பொது செய்தி

தமிழ்நாடு

சாரலாக மாறிய பருவமழை குளிருடன் பனிமூட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, ஜூலை மாதம், 23ம் தேதி நிரம்பியது. அதன்பின், மூன்று முறை சோலையாறு அணை நிரம்பியுள்ளது. அங்கிருந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது.இதேபோல், காடம்பாறை அணை நிரம்பியதும், மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறந்து
 சாரலாக மாறிய பருவமழை குளிருடன் பனிமூட்டம்

வால்பாறை:வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, ஜூலை மாதம், 23ம் தேதி நிரம்பியது. அதன்பின், மூன்று முறை சோலையாறு அணை நிரம்பியுள்ளது. அங்கிருந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது.இதேபோல், காடம்பாறை அணை நிரம்பியதும், மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பருவமழை படிப்படியாக குறைந்து சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது. தென்மேற்கு பருவகாலம் நிறைவடைந்து, வடகிழக்கு பருவ காலம் துவங்கியுள்ள நிலையில், சாரல் மழை பெய்வதால் பனிமூட்டமும், குளிரும் நிலவுகிறது.சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 159.63 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 483 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 815 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X