பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு கொடுங்க! விதைக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி வடக்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், தரமற்ற பாகற்காய் மற்றும் பீர்க்கன் விதைகளால், சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; விதை நிறுவனத்திடம் இழப்பீடு பெற்று தர வேண்டும், விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, சப் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் திம்மங்குத்தில், தரமற்ற பாகற்காய் மற்றும் பீர்க்கன்
 பந்தல் சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு கொடுங்க! விதைக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி வடக்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், தரமற்ற பாகற்காய் மற்றும் பீர்க்கன் விதைகளால், சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; விதை நிறுவனத்திடம் இழப்பீடு பெற்று தர வேண்டும், விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, சப் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் திம்மங்குத்தில், தரமற்ற பாகற்காய் மற்றும் பீர்க்கன் விதைகளால் பாதிக்கப்பட்ட பந்தல் சாகுபடி விவசாயிகள், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், குறிப்பிட்ட நிறுவனத்தின் விதைகளை சாகுபடி செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, நேற்று பொள்ளாச்சி சப் - கலெக்டரை சந்தித்து, மனு அளித்தனர். மனுவில், குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் விதைகளால், பயிரில் வைரஸ் தாக்கம் ஏற்பட்டு, பலத்த நஷ்டமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.மேலும், பிரச்னைக்குரிய விதைகளால், மேலும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழகம் முழுக்க அந்நிறுவனத்தின் விதைகளுக்கு தடை விதிக்க, தமிழக அரசின் வேளாண் துறை செயலருக்கு பரிந்துரை செய்ய வேண்டும், என, வலியுறுத்தியிருந்தனர்.'தினமலர்' செய்திசப் - கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்த விவசாயிகள், பந்தல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நஷ்டம் குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியான செய்தியையும் கொண்டு வந்தனர்.செய்தி வெளியானதால் தான், பிற விவசாயிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடையே தங்கள் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதாக, தெரிவித்தனர்.விதைக்குதடை!பிரச்னை குறித்து, விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது:பந்தல் முறையில் சாகுபடி செய்யப்படும் வெள்ளை மற்றும் பச்சை பாகற்காய் பயிரில் பாதிப்புகள் இருப்பதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆனைமலை ஒன்றியம் வி.காளியாபுரம் பகுதியில், பாதிக்கப்பட்ட சாகுபடி நிலத்தில் இருந்து, விதைகளை எடுத்து, வேளாண் பல்கலைக்கழக ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.ஆய்வு முடிவுகள் வரும் வரை, குறிப்பிட்ட நிறுவனத்தின் இரண்டு வகை பாகற்காய் விதைகளை விற்க, கோவை மாவட்டம் முழுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X