பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி வரை 'மெமு' ரயில்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் 'மெமு' ரயில்களை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்,' என, ரயில் பயணிகள் நலச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டம், தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில், சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்

பொள்ளாச்சி:'கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் 'மெமு' ரயில்களை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்,' என, ரயில் பயணிகள் நலச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டம், தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில், சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயங்கும் அனைத்து 'மெமு' ரயில்களையும், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். கோவை - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி வழித்தடத்தில், கொரோனா முதல் அலைக்கு முன், இயங்கிய அனைத்து ரயில்களையும் மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும். மீட்டர்கேஜ் காலத்தில், கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய அனைத்து எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு - கோவை - ஈரோடு - சேலம் - காட்பாடி வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் இருந்து மீட்டு, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X