பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்... முதன்முறையாக! முழுமையாக அகற்றினால் நீரோட்டம் சிறக்கும்

Added : அக் 12, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை, பாலாற்றின் கரையிலிருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீண்ட காலத்துக்கு பிறகு, அகற்றினர்; ஆறு முழுவதும் அளவீடு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி, திருமூர்த்திமலையிலிருந்து மேற்கு நோக்கி, 60 கி.மீ., துாரம் பாலாறு பயணிக்கிறது.அதன் துணை ஆறாக,
பாலாற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்...  முதன்முறையாக! முழுமையாக அகற்றினால் நீரோட்டம் சிறக்கும்

உடுமலை;உடுமலை, பாலாற்றின் கரையிலிருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீண்ட காலத்துக்கு பிறகு, அகற்றினர்; ஆறு முழுவதும் அளவீடு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி, திருமூர்த்திமலையிலிருந்து மேற்கு நோக்கி, 60 கி.மீ., துாரம் பாலாறு பயணிக்கிறது.அதன் துணை ஆறாக, நல்லாறு மற்றும் ஓடை, சிற்றாறுகள் பாலாற்றில் இணைகிறது. பசுமை சூழ்ந்த மலை மற்றும் தென்னை உள்ளிட்ட விவசாய பூமிகள் என, பாலாறு ஓடுவதால், விவசாயம் மற்றும் வழியோர கிராமங்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
உடுமலை பகுதியில், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளான பாலாறு, நல்லாறு, ஆக்கிரமிப்புகளால் மாயமாகி வருகிறது. ஆற்றின் இரு கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, தென்னை மரங்கள், சொகுசு விடுதிகள் மற்றும் மணல் சுரண்டும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பகுதி நீர் வழித்தடம் மறிக்கப்பட்டதால், நீர் ஓட வழியில்லாமல், நாணல், முட்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் என புதர் மண்டி காணப்படுகிறது.மழை நீர் ஓட வழியில்லாமலும், மணல் திருட்டால், மழை பெய்தால் ஒரு சில நாட்களில் வழிந்து வீணாகி வருகிறது. இதனால், வழியோரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது.

இரு புறமும் உள்ள விவசாய நிலங்களின், கிணறு, போர்வெல்களின் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச்சென்று, பசுமை பகுதியும் வறட்சிப்பகுதியாக மாறி வருகிறது.எனவே, அழிந்து வரும், பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளை மீட்க வேண்டும், என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.ஆறு ஆண்டுக்கு முன், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழு, அளவீடு பணி மேற்கொண்டு, எல்லைகள் அடையாளமிடப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் இழுபறியாகி வந்தது.இந்நிலையில், தற்போது பாலாற்றில், ஜே.கிருஷ்ணாபுரம், ஜே.என்., பாளையம் பகுதிகளில், ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 1.25 கி.மீ., நீளத்தில், 38 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, 223 தென்னை மரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.பி.ஏ.பி., உடுமலை கோட்ட உதவி செயற்பொறியாளர் காஞ்சி துரை, உதவி பொறியாளர் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் ஹேமா மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.பாரபட்சம் வேண்டாம்பாலாறு மற்றும் நல்லாறு, வன எல்லை பகுதிளில் அமைத்துள்ளதால், திருமூர்த்தி அணை துவங்கி, 60 கி.மீ., துாரம் வரை, இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக காணப்படுகிறது.தற்போது, 1.25 கி.மீ., துாரம் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.
மீதம் உள்ள அனைத்து பகுதிகளிலும், விரிவாக ஆய்வு நடத்தி, பாரபட்சமின்றி, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.அதே போல், ஆக்கிரமிப்பாளர்கள் கரைகளை மேடாக்கி, மரங்கள் நடவு செய்திருந்தனர். அவற்றையும் அகற்றி, ஆற்றில் தடையில்லாமல் நீர் செல்லும் வகையில், முழுமையாக துார்வார வேண்டும்.மேலும், மழை நீரை, முறையாக பயன்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், ஆறு மற்றும் ஓடைகளின் குறுக்கே, தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.அதிகாரிகள் கூறுகையில்,' பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, ஏற்கனவே அளவீடு செய்து, அடையாளமிட்ட பகுதிகளில், கோட்டாட்சியர் உத்தரவு அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில், இரு கரைகளிலும் இருந்த, 223 தென்னை மரங்கள் அறுத்து, அப்புறப்படுத்தப்பட்டது. ஆறுகளின் மற்ற பகுதிகளில் அளவீடு செய்து, அகற்ற பணிகள் துவங்கியுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X