பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போது யார்? இன்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் இன்று நடக்கிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவி மற்றும் வடக்கு ஒன்றியம் ஜமீன் முத்துார் ஆறவாது வார்டு, போளியகவுண்டன்பாளையம் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த, 9ம் தேதி
 உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போது யார்? இன்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை

பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் இன்று நடக்கிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவி மற்றும் வடக்கு ஒன்றியம் ஜமீன் முத்துார் ஆறவாது வார்டு, போளியகவுண்டன்பாளையம் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த, 9ம் தேதி நடந்தது.இதையடுத்து, ஓட்டுப் பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை, 8:00 மணி முதல், ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது.தெற்கு ஒன்றியம் செயல்படும் அம்மா திருமண மண்டபத்தில், ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு மேஜைகள் அமைத்து, ஆறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்குமாரபாளையம் ஊராட்சியில் பதிவான, 2,312 ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. காலை, 7:30 மணிக்கு, வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இதே போல, வடக்கு ஒன்றியத்திலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஓட்டு எண்ணிக்கையை பாதுகாப்புடன் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக, ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆனைமலை
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, திவான்சாபுதுார் ஊராட்சியில், 8,556 வாக்காளர்களில், தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், 76.47 சதவீதம் போர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.ஆனைமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில், இன்று, ஓட்டு எண்ணும் பணி நடக்க உள்ளது. இதற்காக, ஒன்றிய அலுவலகம் முழுவதிலும், பாதுகாப்புக்கு போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.ஓட்டுக்களை எண்ணும் மையத்தில், மூன்று மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், இரண்டு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மேஜைக்கு ஒரு கட்சியில் இருந்து ஒரு முகவருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனைமலை முக்கோணம் முதல் நெல்லுக்குத்திப்பாறை வரையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.உடுமலைஉடுமலை ஒன்றியம், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் பதவிக்கான தேர்தலில், மொத்தமுள்ள, 1,213 வாக்காளர்களில், 959 பேர் ஓட்டளித்தனர். ஓட்டுப்பெட்டிகள் ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.வேட்பாளர்கள், ஏஜன்ட்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டி திறக்கப்பட்டு, எண்ணிக்கை நடக்கும். ஓட்டு எண்ணிக்கையொட்டி, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒருசில மணி நேரத்திலேயே முடிவு தெரியவரும் என, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு ஊராட்சி, 5 வது வார்டு உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, பெதப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது- நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X