பொது செய்தி

தமிழ்நாடு

குறைகளை தெரிவிக்க கூட்டமாவது நடத்துங்க: இரு தாலுகா விவசாயிகள் புலம்பல்

Added : அக் 12, 2021
Share
Advertisement
உடுமலை;வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை, மீண்டும் நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு தாலுகா விவசாயிகள், வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி பாசன திட்டங்கள், வேளாண், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் மானியத்திட்டங்கள், பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண,

உடுமலை;வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை, மீண்டும் நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு தாலுகா விவசாயிகள், வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி பாசன திட்டங்கள், வேளாண், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் மானியத்திட்டங்கள், பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண, கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாதம்தோறும் கோட்டாட்சியர் தலைமையில், இந்த கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.கூட்டத்தில், வேளாண் சார்ந்த அனைத்துத்துறையினர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ், ஊரக வளர்ச்சி என துறை அதிகாரிகள் பங்கேற்றதால், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து வந்தது.இந்நிலையில், சட்டசபை தேர்தல், கொரோனா பரவல் என, ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால், முக்கிய சாகுபடி சீசனில், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தற்போது, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் தள்ளுபடி, தரமில்லாத விதைகள், பாசன திட்ட நீர் நிர்வாக குளறுபடிகள், தேங்காய் விலை சரிவு என பல்வேறு முக்கிய பிரச்னைகளால், இரு தாலுகா விவசாயிகளும், பரிதவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரடியாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.எனவே, விவசாயம் பிரதானமாக உள்ள உடுமலை பகுதியில், மீண்டும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X