சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
நெகமம்:மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, வடசித்துாரில் தி.மு.க., காங்., கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்து, கடந்த வாரம் உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டித்தும், வடசித்துாரில், தி.மு.க., காங்., கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில்,
 அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நெகமம்:மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, வடசித்துாரில் தி.மு.க., காங்., கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்து, கடந்த வாரம் உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டித்தும், வடசித்துாரில், தி.மு.க., காங்., கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்ட காங்., தலைவர் பகவதி, கிழக்கு வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க., சார்பில் தெற்கு மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் டாக்டர் நாகராஜ், கிளை செயலாளர் சுப்ரமணியம், கம்யூ., சார்பில் மாவட்ட விவசாய அணி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் பேசுகையில், விவசாயிகள் போராட்டத்தில் புகுந்த வாகனத்தில், மத்திய அமைச்சரின் மகன் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின், மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய்மிஸ்ரா பதவி விலக வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X