தலைமறைவு குற்றவாளிகள்; உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி-'விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்ற, நீதிமன்றம் முன்வராது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தை துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்

புதுடில்லி-'விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்ற, நீதிமன்றம் முன்வராது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



latest tamil news


உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தை துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2018ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் போலீசில் சரண் அடையாமல் தலைமறைவாகவே உள்ளனர்.


latest tamil news


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு 2019ல் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்ற, நீதிமன்றம் முன்வராது' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tc Raman - Kanchipuram,இந்தியா
12-அக்-202112:59:40 IST Report Abuse
Tc Raman தலை மறைவாக இருப்பது தி மு க எம் பி ஆக இருந்தால் . நீதிமன்றம் என்ன செய்யும் ? அதுவும் கிருஸ்துவ எம் பி யாக இருந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. அது தான் தமிழ் நட்டு நிலைமை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-அக்-202108:12:55 IST Report Abuse
RajanRajan அப்புறம் என்ன? அந்த இருவரையும் என்கவுன்டர் பண்ணி கதைய முடிங்க ..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-அக்-202107:54:25 IST Report Abuse
duruvasar சொல்லவேண்டியது உங்க கடமையை. சொல்லிட்டு கிளம்புங்க. பாதித்ததவர்களின் உறவினர்களுடன் சமரசமா போயிட்டா உங்களுக்கு என்ன கான்டு.
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
12-அக்-202109:57:20 IST Report Abuse
KavikumarRamஅப்படின்னா சரி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X