ஐ.டி.ஐ.,ல் சேர 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் :மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ.,ல் சேர 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் :மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

Added : அக் 12, 2021
Share
உடுமலை;அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ( ஐ.டி.ஐ.,) மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கு, 8 மற்றும், 10-ம் வகுப்பு

உடுமலை;அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ( ஐ.டி.ஐ.,) மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கு, 8 மற்றும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச வயது வரம்பு, ஆண்கள், 14 முதல் 40 வயது வரையும், பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர், தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் பெறலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவியருக்கு, கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கைக்கு, உடுமலை அரசு ஐ.டி.ஐ., உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக, உதவி இயக்குனர் 0421 -2230500, 90802 76172, 99447 39810, 94990 55695 மற்றும் உடுமலை அரசு ஐ.டி.ஐ., முதல்வர் 94990 55700, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 94990 55944 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X