பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னதை செய்திருந்தால் மானியம்: வேளாண் துறை வழங்குகிறது

Added : அக் 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த, பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்துள்ள, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.காரமடை வட்டாரத்தில், மக்காச்சோளம் அதிக அளவில், சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கன் படைப்புழுக்கள், குருத்துப் பகுதியை சேதப்படுத்தி வருகின்றன.புழுக்களின் தாக்குதலை

மேட்டுப்பாளையம்;மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த, பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்துள்ள, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.காரமடை வட்டாரத்தில், மக்காச்சோளம் அதிக அளவில், சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கன் படைப்புழுக்கள், குருத்துப் பகுதியை சேதப்படுத்தி வருகின்றன.புழுக்களின் தாக்குதலை கவனிக்காமல் விட்டால், இரண்டு மூன்று நாட்களில் பயிர்கள் முழுவதையும், சேதப்படுத்தி விடும். மக்காச்சோளம் மட்டுமின்றி, 80 வகையான பிற பயிர்களையும், பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஒரு தாய் அந்துப்பூச்சி, ஆயிரம் முட்டைகளை இடக்கூடிய திறன் உடையது. இவை, 400 கி.மீ., வரை இடம் பெயர்ந்து செல்லக் கூடியவையாகும். ஒரு முறைக்கு, 500 முட்டைகள் வரை இடும். முட்டையிலிருந்து இரண்டு மூன்று நாட்களில் பிறக்கும் புழுக்கள், வளர்ந்து சில நாட்களில் கூட்டுப் புழுவாக மாறுகிறது.இலையின் அடிப்பகுதியில் உள்ள முட்டைகளில் இருந்து வெளியேறும் புழுக்கள், இலையின் பச்சையத்தை சாப்பிடுவதால், வெண்மையாக காணப்படும். பிறகு நுனிக்குருத்தை சேதப்படுத்தும். இப்புழுக்களை கட்டுப்படுத்தவும், பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கவும், மருந்தடிக்கும் வழிகளை, வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது.வேளாண்துறை அறிவுறுத்தலின்படி, பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்துள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து, மகசூலை அதிகப்படுத்த, வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, காரமடை வேளாண் விரிவாக்க மையம், மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X