பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்களை கவனமா ஓட்டுங்க: மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை

Added : அக் 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;'பள்ளி வாகனங்களை இயக்கும்போது, டிரைவர்கள், குடும்பப்பிரச்னையை மனதில் நினைத்துக் கொண்டு ஓட்டக்கூடாது. மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.நவம்பர் 1ம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளி வாகனங்களை, காவல், வருவாய், போக்குவரத்து, கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய
 பள்ளி வாகனங்களை கவனமா ஓட்டுங்க: மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை

மேட்டுப்பாளையம்;'பள்ளி வாகனங்களை இயக்கும்போது, டிரைவர்கள், குடும்பப்பிரச்னையை மனதில் நினைத்துக் கொண்டு ஓட்டக்கூடாது. மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.நவம்பர் 1ம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளி வாகனங்களை, காவல், வருவாய், போக்குவரத்து, கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, ஆய்வு செய்து வருகிறது.மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளிகள் வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிரவன், மாவட்ட கல்வி அலுவலர் கீதா, டி.எஸ்.பி., ஜெய்சிங், காரமடை வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், பெ.நா.பாளையம் பகுதிகளில், 52 தனியார் பள்ளிகளில், 380 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில், முதல்கட்ட ஆய்வு நடந்தது.பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகள், இருக்கைகளின் தரம், முதலுதவி பெட்டி, அவசரகால வழி, தீ தடுப்பான், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது.கவனம் தேவைஆய்வின்போது, மாவட்ட கல்வி அலுவலர் கீதா பேசியதாவது:பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், குடும்ப பிரச்னையை மனதில் நினைத்துக் கொண்டு ஓட்டக் கூடாது. மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். பஸ்ஸில் உள்ள உதவியாளர், குழந்தைகள் வாகனத்தில் ஏறிய பின்பும், குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்த பின்பும், நன்கு உறுதி செய்த பிறகே, பஸ்சை எடுக்க, டிரைவரை அனுமதிக்க வேண்டும்.பஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.பள்ளிகள் திறந்த முதல், 15 நாட்களுக்கு, மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும், அவர்கள் கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில், ஆசிரியர்கள் பாட்டு பாட வைத்தும், விளையாட வைக்க வேண்டும்.பள்ளிக்கு மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X