தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, 74 மையங்களில், இன்று பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இரண்டு கட்டங்களாக, 6 மற்றும் 9ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம், 140 மாவட்ட கவுன்சிலர், 1,381
உள்ளாட்சிகளில் யாருக்கு வெற்றி? இன்று ஓட்டு எண்ணிக்கை,

சென்னை :ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, 74 மையங்களில், இன்று பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இரண்டு கட்டங்களாக, 6 மற்றும் 9ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

மொத்தம், 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,901 ஊராட்சி தலைவர், 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பல பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news



இத்தேர்தலில், 41 ஆயிரத்து 500 ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் 74 ஓட்டு எண்ணும் மையங்களில், அவை வைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 8:௦௦ மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஓட்டு எண்ணிக்கை மையங்களின் உள்ளே மற்றும் வெளியே, 'சிசிடிவி கேமரா' வாயிலாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
ஓட்டுச் சீட்டுக்கள் வாயிலாக தேர்தல் நடந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் தெரிய அதிக நேரம் தேவைப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

ஆணையர் ஆலோசனை

இதற்கிடையில் ஓட்டு எண்ணிக்கையை அமைதியாக நடத்துவது குறித்து, ஒன்பது மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் பார்வையாளர்கள், எஸ்.பி.,க்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பதவிக்கான ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன், முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையை, 'சிசிடிவி கேமரா' வாயிலாக கண்காணிக்க வேண்டும். முடிவுகளை ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-அக்-202105:30:52 IST Report Abuse
Mani . V யார் அதிகம் பணம் கொடுத்தார்களோ? அவர்கள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X