பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் வடிகாலை மூடும் அதிகாரிகள்: குளங்களுக்காக வருந்தும் விவசாயிகள்

Added : அக் 12, 2021
Share
Advertisement
அன்னுார்:அதிகாரிகளின் முன்யோசனையற்ற செயலால், மழைநீர் வடிகால் மூடப்படும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அத்திக்கடவு--அவிநாசி திட்டம் 1,753 கோடி ரூபாயில், 2019 டிசம்பர் முதல் நடந்து வருகிறது.இதில், அன்னுார் ஒன்றியத்தில், மேட்டுப்பாளையம் சாலையில் பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடக்கிறது. 119 ஏக்கர் பரப்பளவுள்ள அன்னுார் பெரிய
 மழைநீர் வடிகாலை மூடும் அதிகாரிகள்: குளங்களுக்காக வருந்தும் விவசாயிகள்

அன்னுார்:அதிகாரிகளின் முன்யோசனையற்ற செயலால், மழைநீர் வடிகால் மூடப்படும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அத்திக்கடவு--அவிநாசி திட்டம் 1,753 கோடி ரூபாயில், 2019 டிசம்பர் முதல் நடந்து வருகிறது.இதில், அன்னுார் ஒன்றியத்தில், மேட்டுப்பாளையம் சாலையில் பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடக்கிறது. 119 ஏக்கர் பரப்பளவுள்ள அன்னுார் பெரிய குளத்திற்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து மழைநீர் வருகிறது.மற்றும் மேற்குப் பகுதியில் இருந்து வரும் மழைநீர், மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரிய பாலத்திற்கு கீழே புகுந்து, குளத்திற்கு செல்கிறது.அத்திக்கடவு திட்ட பிரதான குழாய்கள் பெரிய பாலத்தை ஒட்டி பதிக்கப்படுவதால், வடிகால் அடைபட்டு, குளத்துக்கு மழைநீர் வரத்து மிகவும் குறைந்து விடும். அவ்வழியாக வரும் மழைநீர், அருகிலுள்ள தோட்டங்கள் மற்றும் வேறு பள்ளங்களுக்குப் பாயும் வாய்ப்பு உருவாகியுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'பாலத்தை ஒட்டி மழை நீர் வரும் பாதையில் அத்திக்கடவு குழாய்களை அதிக ஆழத்தில் பதித்தால், அதற்குமேல் மழைநீர் எளிதாக ஓடி பாலத்துக்கு அடியில் சென்று குளத்திற்கு சென்று விடும். ஆனால், மழை நீர் வரும் பள்ளத்தில் மேலோட்டமாக குழாய்களை பதிக்கின்றனர். இதனால், வடிகால் மேடிட்டு, மழை நீர் செல்வது தடைபடும்; குளத்துக்கு மழைநீர் வருவது வெகுவாக குறைந்து விடும்' என்றனர்.எனவே, கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள், குழாய்களை, ஆழமாக பதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X