பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் மருந்தகங்களில் 'அம்ருத் மகோத்சவ்'

Added : அக் 12, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:மக்கள் மருந்தகங்களில், சுதந்திர தின பவள விழாவை ஒட்டி, மருத்துவ முகாம் நடந்தது.குறைந்த விலையில், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கும் வகையில், மக்கள் மருந்தகங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.மக்கள் மருந்தகங்களில், 75வது சுதந்திர தின பவள விழாவை ஒட்டி, 'அம்ருத் மகோத்சவ்' எனும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த, மத்திய அரசு

கருமத்தம்பட்டி:மக்கள் மருந்தகங்களில், சுதந்திர தின பவள விழாவை ஒட்டி, மருத்துவ முகாம் நடந்தது.குறைந்த விலையில், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கும் வகையில், மக்கள் மருந்தகங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.மக்கள் மருந்தகங்களில், 75வது சுதந்திர தின பவள விழாவை ஒட்டி, 'அம்ருத் மகோத்சவ்' எனும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையொட்டி, அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டியில் உள்ள மக்கள் மருந்தகத்தில், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மூத்த குடிமக்கள் 75 பேருக்கு முதலுதவி பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முகாமில், மக்கள் மருந்தக 'ஜெனரிக்' மருந்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X