பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி பாதியில் நிற்குது!மூன்றரை ஆண்டுகளாகியும் முடிக்கல

Added : அக் 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், முடிக்கப்படாமல் பாதியில் நிற்பதால், பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஒட்டுமொத்த கழிவுநீர், பவானி ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் இருக்க, 93 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது.கடந்த, மூன்றரை
நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி  பாதியில் நிற்குது!மூன்றரை ஆண்டுகளாகியும் முடிக்கல

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், முடிக்கப்படாமல் பாதியில் நிற்பதால், பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஒட்டுமொத்த கழிவுநீர், பவானி ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் இருக்க, 93 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது.கடந்த, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திட்ட பணிகள் துவங்கின. நகரில் பெரும்பாலான இடங்களில், குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குழாய் பதிக்காமல், குழிகள் தோண்டிய நிலையிலே அப்படியே உள்ளது.சாலைகளின் மையப்பகுதியில், குழாய் பதிக்க குழிகள் தோண்டி வைக்கப்பட்டதால், பல இடங்களில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.இதனால் பொதுமக்கள், இரண்டு, மூன்று வீதிகளை சுற்றி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் குழிகளில் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.ஆமை வேகம்இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:பாதாள சாக்கடைப் பணி, ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. சில இடங்களில், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். சாலையில், பிராதன குழாய் பதிக்க குழி தோண்டினால், வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் குழாய் பதிக்க, குழியை உடனடியாக தோண்டுவது இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் கழித்த பின்பு, மீண்டும் கழிவுநீர் குழாய் பதிக்கும் குழி தோண்டுகின்றனர். இதனால், சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளன.முறையான அளவில், குழிகள் தோண்டப்படாமல், இஷ்டம் போல் குழி தோண்டி வருகின்றனர். இதனால் எந்த நோக்கத்திற்காக, இத்திட்டம் அமைக்கப்பட்டதோ, அந்த திட்டம் மக்களுக்கு பயன் இல்லாத நிலை ஏற்படும்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகளை சரியாக கண்காணிப்பதில்லை.மணிநகர் அரசு உயர்நிலைப்பள்ளி வீதியில் தோண்டிய குழியில், குழாய் பதித்து மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால், வீடுகளில் இருந்து தங்கள் வாகனங்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பாதியில் நிற்கும் குழாய் பதிக்கும் பணிகளை, உடனடியாக நிறைவு செய்யவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், குழாய் பதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X