'குடி' மையமாக மாறிய மாநகராட்சி கழிப்பறை

Added : அக் 12, 2021
Share
Advertisement
அமைந்தகரை : 'குடி' மகன்களின் அட்டூழியத்தால், மாநகராட்சி கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 'டாஸ்மாக்' மதுபானக்கடையை ஒட்டியுள்ள 'பார்'கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 'குடி'மகன்கள்டாஸ்மாக் கடையை ஒட்டிய பகுதிகளை 'குடி' மையமாக பயன்படுத்தி வருகின்றனர். அதீத போதையில் அட்டகாசத்தில் ஈடுபடும் இவர்களால்,

அமைந்தகரை : 'குடி' மகன்களின் அட்டூழியத்தால், மாநகராட்சி கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 'டாஸ்மாக்' மதுபானக்கடையை ஒட்டியுள்ள 'பார்'கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 'குடி'மகன்கள்டாஸ்மாக் கடையை ஒட்டிய பகுதிகளை 'குடி' மையமாக பயன்படுத்தி வருகின்றனர். அதீத போதையில் அட்டகாசத்தில் ஈடுபடும் இவர்களால், பொது மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, அமைந்தகரை, புல்லா அவென்யூ முதல் குறுக்கு தெருவில், 'டாஸ்மாக் கடை எண்: 436' செயல்படுகிறது. இக்கடையில் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை, 'குடி' மகன்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதனால், கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.அண்ணாநகர் மண்டல அலுவலக பின்புறத்திலேயே இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X