பொது செய்தி

தமிழ்நாடு

குண்டும், குழியுமான சாலைகள் குரோம்பேட்டை மக்கள் தவிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : குரோம்பேட்டை, நெமிலிச்சேரியில், சீர்குலைந்து விட்ட சாலைகளை சீரமைக்க, பல மாதங்களாக போராடியும் நடவடிக்கை எடுக்கப் படாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, 18 வது வார்டு, குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, ஓம்சக்தி நகரில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், ராபின் நகர், முல்லை தெரு, திருவள்ளுவர் தெரு, சாய் அவென்யூ

குரோம்பேட்டை : குரோம்பேட்டை, நெமிலிச்சேரியில், சீர்குலைந்து விட்ட சாலைகளை சீரமைக்க, பல மாதங்களாக போராடியும் நடவடிக்கை எடுக்கப் படாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, 18 வது வார்டு, குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, ஓம்சக்தி நகரில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், ராபின் நகர், முல்லை தெரு, திருவள்ளுவர் தெரு, சாய் அவென்யூ பகுதிகளில், 'பேவர் பிளாக்' சாலைகள் போடப்பட்டுள்ளன.பல மாதங்களாக, இச்சாலைகள் பெயர்ந்து, பள்ளம் பள்ளமாக காணப்படுகிறது. சில இடங்களில், உள்வாங்கி, 'ஜிக் ஜாக்' சாலைகளாக மாறிவிட்டன.அதேபோல், பிரமாணர் தெரு, நெமிலிச்சேரி மெயின் ரோடு ஆகியவை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், குண்டும், குழியுமாக உள்ளன.

லேசான மழை பெய்தாலே, குளம்போல் நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். 'பேவர் பிளாக்' சாலைகளில் நடந்து செல்வோர், வழுக்கி விழுகின்றனர். முதியோர், பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பல மாதங்களாக சீர்கெட்டு கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் பலன் இல்லை. நகராட்சியில் 10 கோடி ரூபாய் செலவில், சாலை போடும் பணி நடந்து வருகிறது.இதுபோன்ற நேரத்தில், அதிக புகார்கள் வரும் இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாலை அமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X