பொது செய்தி

தமிழ்நாடு

8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை-சம்பா பயிர் பாதித்த, எட்டு லட்சம் விவசாயிகளுக்கு, 1,600 கோடி ரூபாய் விரைவில் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமின்றி, பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்தனர். டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், 'புரெவி'

சென்னை-சம்பா பயிர் பாதித்த, எட்டு லட்சம் விவசாயிகளுக்கு, 1,600 கோடி ரூபாய் விரைவில் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.



latest tamil news


தமிழகத்தில் 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமின்றி, பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்தனர். டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், 'புரெவி' புயல்களால், 15 மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜனவரியில் அறுவடை நேரத்தில்,பருவம் தவறி பெய்த மழையாலும், பல மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. மொத்தமாக, 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதித்தன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக, 1,715 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.


latest tamil news


பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்று தரும் பணிகளை, வேளாண் துறையினர் மேற்கொண்டனர். தற்போது, 1,600 கோடி ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன. மாநிலம் முழுதும், எட்டு லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக, பயிர் இழப்பீடு நிவாரணம், நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும்.

இம்முறை, முதல்வர் ஸ்டாலின் கையால் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் முடிவெடுத்துள்ளனர். தேதி இன்னும் முடிவாகாததால் விவசாயிகள்காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
12-அக்-202112:18:51 IST Report Abuse
Soumya நம்பிள் கான்கிரிட் விவசாயி விடியலுக்கு இழப்பீடு உண்டா
Rate this:
Cancel
12-அக்-202109:59:53 IST Report Abuse
ஆரூர் ரங் ஸ்டாலின் ஐயா முன்பு போல🤔. பூட்ஸ் காலுடன் கான்கிரீட் தளத்தில் வயலில் இறங்கி நேரடியாக இழப்பீடு தருவார். கான்கிரீட் போட்ட வயலில் விளைச்சல்😇 இருக்காது. ஆனா அதற்கு நஷ்டஈடு கிடையாது 😪 வரவு எட்டணா...செலவு பத்தணா . உழவர் கணக்குப் பார்த்தால் உழைக்கு கூட மிஞ்சாது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-அக்-202109:15:14 IST Report Abuse
S. Narayanan அப்போது தான் கட்டிங் கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X