பொது செய்தி

தமிழ்நாடு

5 சிறப்பு இனிப்பு வகைகள்: தீபாவளிக்காக ஆவினில் அறிமுகம்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் ஐந்து வகையான சிறப்பு இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இனிப்பு வகைகளின் தொகுப்பை, அமைச்சர் நாசர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், புதிய இனிப்பு வகைகளின் அறிமுக விழா நேற்று நடந்தது.ரூ.1.2 கோடி விற்பனை காஜூ கத்லீ, நட்டி மில்க் கேக், மோத்தி
 5 சிறப்பு இனிப்பு வகைகள்: தீபாவளிக்காக ஆவினில் அறிமுகம்

சென்னை-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் ஐந்து வகையான சிறப்பு இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இனிப்பு வகைகளின் தொகுப்பை, அமைச்சர் நாசர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், புதிய இனிப்பு வகைகளின் அறிமுக விழா நேற்று நடந்தது.ரூ.1.2 கோடி விற்பனை காஜூ கத்லீ, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜூ பிஸ்தா ரோல், பிளேவர்டு மில்க் பர்பி அடங்கிய இனிப்பு வகைகளை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார்.

பின், அவர் பேசியதாவது:ஆவின் நிறுவனம் கடந்தாண்டு, 15 டன் இனிப்பு வகைகளை, 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. இந்தாண்டு, 25 டன் இனிப்புகளை விற்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.இதற்காக விற்பனை மையங்களை அதிகரிக்க உள்ளோம். தொடர்ந்து, 20 ஆண்டுகளாக விற்பனை ஸ்தம்பித்து, ஆவின் நிறுவனம் 220 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. லிட்டர் பாலை 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறோம்; தனியார் நிறுவனங்கள் 25 - 28 ரூபாய்க்கு வாங்குகின்றன. 12 லிட்டர் பாலில் தான், 1 கிலோ பால் பவுடர் கிடைக்கும். நஷ்டம்அதில் கூடுதலாக நமக்கு, அரை கிலோ வெண்ணை கிடைக்கிறது. 1 கிலோ பால்பவுடர் தயாரிக்க, 40 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

கொரோனா காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு இடையிலும், பால் உற்பத்தியை தவறாமல் செய்தனர். ஆவின் நிர்வாகமும், பால் உற்பத்தியாளர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று கொள்முதல் செய்தது.நகர மக்களுக்கு பால் கிடைக்கவில்லை என்ற புகார் வராத வகையில் வினியோகம் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை கூடுதல்தலைமை செயலர் ஜவஹர், ஆவின் மேலாண்மை இயக்குனர்கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiruselvam - Pondicherry,இந்தியா
12-அக்-202114:14:12 IST Report Abuse
Thiruselvam நாம் நம்முடைய மாநிலத்து பொருள்களை வாங்கி மாநிலத்து பொருளாதாரத்தை உயர்த்துவோம், வரும் பண்டிகை காலங்களில் ஆவின் வெளியிட்டுள்ள புதிய வகை இனிப்புகளை வாங்கி வரவேற்பு கொடுப்போம்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
12-அக்-202113:22:42 IST Report Abuse
raja விடுமுறை தினத்தை முன்னிட்டுன்னு அவனுவோலை போலவே சொல்லுங்க.... தமிழ் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டானுவோ... ஆனா அவங்க பண்டிகையை முன்னிட்டு அவங்ககிட்ட இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் உறுவுவானுவோ...திருட்டு திராவிடணுவோ....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
12-அக்-202112:42:31 IST Report Abuse
raja விடுமுறை தினத்தை முன்னிட்டுன்னு சொன்ன நல்லா இருக்கும்... உண்மை தமிழ்பேசும் இந்துக்களுக்கு பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதவனுவோ... அவன்கிட்டருந்தது முடிஞ்ச அளவுக்கு உருவ பாக்குறானுவோ... இனிப்புங்கிற பேருல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X