பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் பணம் பறித்தவர் கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
அசோக் நகர் : ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிக்கு உதவி செய்வது போல் நடித்து, பணம் பறித்துச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி, 89; ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி.இவர், 8ம் தேதி மதியம்,மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,மில், 10 ஆயிரம் ரூபாய் எடுத்து, வெளியே நின்றிருந்தார். அப்போது, இருசக்கர

அசோக் நகர் : ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிக்கு உதவி செய்வது போல் நடித்து, பணம் பறித்துச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி, 89; ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி.இவர், 8ம் தேதி மதியம்,மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,மில், 10 ஆயிரம் ரூபாய் எடுத்து, வெளியே நின்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வீட்டின் அருகில் இறக்கி விடுவதாக கூறி, அவரை பைக்கில் அழைத்து சென்றார். கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு முன் இறக்கி விட்டு, அவரது கவனத்தை திசை திருப்பி, பணப் பையை பறித்து சென்றார்.

இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்தனர்.சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் படி, வழிப்பறியில் ஈடுபட்டது, கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனி, 5வது தெருவைச் சேர்ந்த சிவகுமார், 40 என, தெரியவந்தது. இதையடுத்து, சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 500 ரூபாய் மற்றும்இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், அசோக் நகர் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட, 12 வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X