பொது செய்தி

தமிழ்நாடு

நலச்சங்கத்தினர் முயற்சியால் சுத்தமானது பெரும்பாக்கம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
பெரும்பாக்கம் : பெரும்பாக்கம், கிருஷ்ணா நகரில், சாலையோரம் பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க, நலச்சங்கத்தினர் அமைத்துள்ள தடுப்பு வேலி பலன் அளித்துள்ளது.சென்னை, பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரில், பல தெருக்கள் உள்ளன. அத்தெருக்களின் வளியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், தெருக்களின் சந்திப்புகளிலும், சாலையோரத்திலும், குப்பையை வீசிவிட்டு

பெரும்பாக்கம் : பெரும்பாக்கம், கிருஷ்ணா நகரில், சாலையோரம் பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க, நலச்சங்கத்தினர் அமைத்துள்ள தடுப்பு வேலி பலன் அளித்துள்ளது.

சென்னை, பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரில், பல தெருக்கள் உள்ளன. அத்தெருக்களின் வளியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், தெருக்களின் சந்திப்புகளிலும், சாலையோரத்திலும், குப்பையை வீசிவிட்டு செல்வர்.இதனால், பூங்கா எதிரில் அமைந்துள்ள சந்திப்பில், குப்பைகள் நிறைந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. ஊராட்சியினர் தொடர்ந்து குப்பை அகற்றி 'பிளீச்சிங் பவுடர்' துாவியும் பலன் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணா நகர் நலச்சங்கத்தினர் இணைந்து, நகர் முழுதும் குப்பை கொட்டும் பகுதியை ஆய்வு செய்தனர்.அடுத்த கட்டமாக தடுப்பு வேலி அமைத்து பாதுகாத்துள்ளனர். மேலும், ஆங்காங்கே எச்சரிக்கை பலகை, கண்காணிப்பு கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. நலச்சங்கத்தினரின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கண்காணிப்பு 'கேமரா' உள்ளதாலும், தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாலும், அப்பகுதியில் சாலையோரம் குப்பை கொட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.இதை பார்த்து, பிற பகுதி நலச்சங்கத்தினரும், தங்கள் பகுதியை துாய்மையாக வைத்திருக்க, இதே நடைமுறையை கடைபிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X