பொது செய்தி

தமிழ்நாடு

எம்.சி.ரோடில் விரைவில் அமைகிறது நவீன வசதியுடன் நடைபாதை வளாகம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
ராயபுரம், : சென்னையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடில், நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.ரூ.16 கோடி மதிப்புஇந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னையின் முக்கிய
 எம்.சி.ரோடில் விரைவில் அமைகிறது நவீன வசதியுடன் நடைபாதை வளாகம்

ராயபுரம், : சென்னையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடில், நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.ரூ.16 கோடி மதிப்புஇந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்கும் வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடில், 16 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது.வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, வீராஸ் கலெக் ஷன் துவங்கி, ஜி.ஏ.ரோடு முத்துமாரியம்மன் கோவில் வரை நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.சாலையின் இருபுறமும் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் மழை நீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்டமைப்பு, குடிநீர் மற்றும் புதை சாக்கடை குழாய்கள் ஆகிய அனைத்தும் செல்லும் வகையில், முழுமையான சாலையாக கட்டமைக்கப்பட உள்ளன.

நெரிசலுக்கு தீர்வுநடைபாதை வளாகத்தின் சுற்றுச்சுவரில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட உள்ளன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் அமரும் வகையில் வண்ணமயமான இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மரங்களும் நடப்பட உள்ளன.வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ராபின்சன் பூங்காவில், பெரிய அளவிலான வாகன நிறுத்தமும் அமைக்கப்பட உள்ளது.ஏற்கனவே 2019ல், தி.நகர், பாண்டிபஜாரில் 39 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எம்.சி.ரோடில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கான முதற்கட்ட பணி நடந்து வருவதாக, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X