பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : சென்னை மாதவரம், விச்சூர், மணலி, மணலிபுது நகர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி, எண்ணுார் விரைவு சாலைகள் வழியாக தினசரி, 1,000த்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்னை துறைமுகம் செல்கின்றன.இதனால், மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் சாலை ஸ்தம்பிக்கிறது. அவ்வப்போது விபத்தால் உயிர் பலியும் ஏற்படுகிறது.இந்நிலையில்,

திருவொற்றியூர் : சென்னை மாதவரம், விச்சூர், மணலி, மணலிபுது நகர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி, எண்ணுார் விரைவு சாலைகள் வழியாக தினசரி, 1,000த்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்னை துறைமுகம் செல்கின்றன.

இதனால், மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் சாலை ஸ்தம்பிக்கிறது. அவ்வப்போது விபத்தால் உயிர் பலியும் ஏற்படுகிறது.இந்நிலையில், கன்டெய்னர் லாரியால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தாத போக்கு வரத்து போலீசாரை கண்டித்து, வடசென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று மதியம் மாவட்ட பொதுச் செயலர் ஜெய்கணேஷ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பா.ஜ.,வினர் 100க்கும் மேற்பட்டோர் எர்ணாவூர், லிப்ட் கேட் சந்திப்பில் ஒன்று கூடி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X