பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: பகிரங்க வேட்டை

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.சந்துரு, சாத்தான் குளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'ஒரு மனிதனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவன் ஆசையை துாண்ட வேண்டும்' என்பது, சதுரங்க வேட்டை படத்தில் இடம் பெற்றுள்ள வசனம்.இதே வழிமுறையை தான், அரசியல் கட்சிகள் தேர்தல்தோறும்
உள்ளாட்சி தேர்தல்,வாக்குறுதிகள், இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



கே.சந்துரு, சாத்தான் குளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'ஒரு மனிதனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவன் ஆசையை துாண்ட வேண்டும்' என்பது, சதுரங்க வேட்டை படத்தில் இடம் பெற்றுள்ள வசனம்.இதே வழிமுறையை தான், அரசியல் கட்சிகள் தேர்தல்தோறும் பின்பற்றுகின்றன. 'வாக்குறுதி' என்ற பெயரில் மக்களிடம் ஆசையை துாண்டி ஓட்டு பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும், அவர்களை ஏமாற்றுகின்றன.

சமீபத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.இதில் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் ஆணையமே மயங்கும் அளவிற்கு வாக்குறுதிகளை வாரி வழங்கினர்!எம்.பி., - எம்.எல்.ஏ., போன்றோருக்கு மாத சம்பளம் உண்டு. பதவிக் காலம் முடிவடைந்ததும், ஓய்வூதியமும் உண்டு.ஆனால், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. 'அமர்வு படி' என்று மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்குவர்; அவ்வளவு தான்.இந்த, 1,000 ரூபாய் அமர்வுப்படியை பெற்று, மக்கள் சேவை செய்ய துடிக்கின்றனர், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்.

அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் வாக்குறுதிகள் நம் தலையை கிறுகிறுக்க வைக்கின்றன.தினமும் 1 லி., பால், இரண்டு முட்டைகள், மாதம்தோறும் 25 கி., அரிசி வழங்குவாராம் ஒரு வேட்பாளர்.இன்னொருவர், அனைத்து வீடுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் மின் கட்டணத்தை, அவரே செலுத்துவாராம்.பெண்களுக்கு தங்க காசு, வெள்ளி கொலுசு வழங்கப்படுமாம்.இது தவிர, 'திருப்பதி, பெங்களூரு சுற்றுலா, மூன்று மாத மளிகை பொருட்கள், வாரம் இரண்டு முறை பிரியாணி, ஆந்திர மாநில கள், முக்கம்பா சாராயம், செலவுக்கு 1,000 ரூபாய் பணம் தர்றோம்...' இப்படி வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளனர்.


latest tamil news


லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் கூட இப்படிப்பட்ட வாக்குறுதிகளை யாரும் வழங்கவில்லை.அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளில், ஒன்று, இரண்டை நிறைவேற்ற முயற்சித்தாலும், வார்டுக்கு 10 - 20 கோடி ரூபாய் தேவைப்படும். எந்த வருவாயை எதிர்பார்த்து, இத்தகைய வாக்குறுதிகளை கொடுக்கின்றனர்?மக்களுக்கு கொடுப்பதற்கே இவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்வர் என்றால், அவர்கள் ஐந்து ஆண்டுகளில் எத்தனை கோடி ரூபாய் சுருட்ட கணக்கு போட்டிருப்பர்! இவர்களா மக்கள் சேவகர்கள்?இது சதுரங்க வேட்டை அல்ல; அரசு பணத்தை சுருட்ட நடக்கும் பகிரங்க வேட்டை

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
12-அக்-202121:49:11 IST Report Abuse
T.sthivinayagam ரூபாய் 15 லட்சம் தருகிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சிகள் உண்டு
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
12-அக்-202118:02:44 IST Report Abuse
INDIAN Kumar ஜன நாயகம் மங்கி பண நாயகம் ஜொலிக்கிறது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
12-அக்-202113:50:49 IST Report Abuse
Dhurvesh டாடாவால் ஏர் இந்தியாவை இலாபமாக நடத்த முடியும் ஆனால் ஒன்றிய அரசால் நடத்த முடியாது. ஒற்று மொத்த இந்தியாவையும் டாடா இடம் ஒப்படைத்துவிட்டால் இந்தியா கடன் இல்லாமல் உலக சந்தையில் பெருமூச்சு விடும். இதுவும் நல்ல யோசனைதானே ?
Rate this:
V. Nagasubramanian - Secunderabad,இந்தியா
12-அக்-202114:32:14 IST Report Abuse
V. Nagasubramanianஓன்றிய அரசை ஒப்படைகிறோமோ இல்லையோ தமிழ் நாடு அரசை ஒப்படைத்து விடலாம் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.5 l கோடி கடன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X