வனத்துறை அலுவலகத்தில் ரூ 34.65 லட்சம் பறிமுதல்: இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 13, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்தலித் பெண் பலாத்காரம்நொய்டா: உத்தர பிரதேசத்தின் ஜெவார் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நேற்று முன்தினம் வயலுக்கு சென்றார். அங்கு, மாடு மேய்க்க வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த, 28 வயது நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். குற்றவாளி, தன்னை பலருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள்
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்தலித் பெண் பலாத்காரம்

நொய்டா: உத்தர பிரதேசத்தின் ஜெவார் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நேற்று முன்தினம் வயலுக்கு சென்றார். அங்கு, மாடு மேய்க்க வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த, 28 வயது நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். குற்றவாளி, தன்னை பலருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவான நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை வழக்கில் நாளை தண்டனை

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவரது மனைவி உத்ரா, 25, கடந்த ஆண்டு வீட்டில் துாங்கியபோது பாம்பு கடித்து இறந்தார். விசாரணையில், அது இயல்பாக நடந்த சம்பவம் அல்ல, திட்டமிட்ட கொலை என கண்டறிந்த போலீசார் சூரஜை கைது செய்தனர். விசாரணை முடிவில் சூரஜ் கொலை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனையை நாளை வழங்குகிறது. 'சான்றுகள் மற்றும் சூழ்நிலை அடிப்படையில் போலீசார் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை தண்டனைக்கு உள்ளாக்கி உள்ளனர்' என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்

ரயிலில் தொல்லை: 8 பேர் கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் இகத்புரி - கசரா இடையே சமீபத்தில் சென்ற லக்னோ- - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், 20 வயது பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. அவரை காப்பாற்ற முயன்ற கணவரை தாக்கியதுடன், பயணியரை மிரட்டி பணம், நகைகளையும் பறித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


இறைச்சி கடையால் நிம்மதி போச்சு: தர்ணாவில் ஈடுபட்ட குடும்பம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை ஒடையகுளம் குப்பிச்சிபுதுார் அண்ணா நகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். அவரது மனைவி சீனியம்மாள். இருவரும் தங்கள் மகன், மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன்வந்து, நேற்று காலை சப் - கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் நடந்து கொண்டிருந்த போது, இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சலிங்கத்தின் வீடு முன், இறைச்சிக்கடை செயல்படுவதாகவும், கடையில் இருந்து வரும் துர்நாற்றம், ஈக்களால் சுகாதாரம் சீர்கெடுவதுடன், இறைச்சிக்கழிவுகளுக்கு சண்டையிட்டுக் கொள்ளும் நாய்களால், குழந்தைகள் வெளியில் செல்லவே அஞ்சும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், கடையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மனம் நொந்து, குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார்.போலீசார் மற்றும் சப் - கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவர்களை சமாதனம் செய்து, பிரச்னை குறித்த மனுவை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

வனத்துறை அலுவலகத்தில் ரூ 34.65 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: வனத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லஞ்சமாக பெறப்பட்ட ரூ 34.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மேலாளர் நேசமணி மற்றும் அலுவலர் சங்கர் கணேசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


latest tamil news


ஓட்டு பெட்டிகள் சீல் உடைப்பு: 3 போலீசார் சஸ்பெண்ட்

வாணியம்பாடி-ஆலங்காயத்தில், ஓட்டு பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து தேர்தல் அலுவலர், மூன்று போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில், 27 ஊராட்சி தலைவர்கள், 237 வார்டு உறுப்பினர்கள், 18 ஒன்றிய குழு உறுப்பினர், இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த, 9ல் நடந்தது. பதிவான ஓட்டு பெட்டிகள்ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது.

அங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.ஜோலார்பேட்டை, தி.மு.க., - எம்.எல்.ஏ., தேவராஜ் நேற்று முன்தினம் ஓட்டு பெட்டிகள் வைத்திருந்த பள்ளிக்கு வந்து சென்றதாகவும், அதன் பின் சில பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா, நேற்று பள்ளிக்கு வந்து அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஆலங்காயம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு, விதிகளை மீறி சென்றவர்கள் மீது விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்படும். தேர்தல் அலுவலர் சிவக்குமார், பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.

கொசு மருந்து குடித்த 3 வயது குழந்தை பலி

பல்லாவரம் : கொசு மருந்து குடித்த, 3 வயது குழந்தை இறந்தது. உடலை பிரேத பரிசோதனை செய்ய, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவைச் சேர்ந்தவர், தமிழரசன்.இவரது மனைவி அருள்மொழி. தம்பதிக்கு, 3 வயதில், கிஷோர் என்ற மகன் இருந்தான்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வைத்து இருந்த கொசு மருந்தை, சிறுவன் கிஷோர் எடுத்து குடித்துள்ளான்.

இதை கண்ட பெற்றோர்,அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர். மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன்கொண்டு செல்லப்பட்டான். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான்.

தொடர்ந்து, சிறுவனின் உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்து கொள்வதாக கூறி, அவனது, உறவினர்கள் காரில் கொண்டு வந்தனர்.'எழும்பூர் மருத்துவமனையில் குழந்தை இறந்ததால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இங்கு, பிரேத பரிசோதனை செய்ய முடியாது' என, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சிறுவனின் உறவினர்கள் திடீரென மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். பல்லாவரம் போலீசார் வந்து, அவர்களிடம் பேசினர்.தொடர்ந்து, 'சிறுவனின் உடல், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், வழங்கப்படும், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்' எனக்கூறி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

முதல்வர் பற்றி அவதூறு; 'சாட்டை' துரைமுருகன் கைது

நாகர்கோவில்-முதல்வர் பற்றி அவதுாறாக பேசிய 'சாட்டை' துரைமுருகன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று முன்தினம் மாலை தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சீமான் முன்னிலையில் பேசிய சாட்டை துரைமுருகன், முதல்வரை அவதுாறாக பேசினார். இது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தக்கலை போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகர் அளித்த புகார்படி, நாங்குநேரி பகுதியில் சென்ற துரைமுருகனை கைது செய்து தக்கலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.இதற்கிடையில் தக்கலையில் காமராஜர் சிலைக்கு சீமான் அணிவித்த மாலையை காங்கிரசார் கழற்றி வீசி விட்டு, சிலையை சுத்தம் செய்து பாலாபிஷேகம் நடத்தி வேறு மாலை அணிவித்தனர்.

வட மாநில கொள்ளையன் ஸ்ரீபெரும்புதுாரில் 'என்கவுன்டர்'

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், 'டாஸ்மாக்' ஊழியரை சுட்டு கொன்றது, பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை பறித்தது என, அட்டூழியம் செய்த ஜார்க்கண்ட் மாநில கொள்ளையனை, 14 மணி நேர தேடுதலுக்கு பின், போலீசார் சுட்டுக் கொன்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக, வாரண வாசியைச் சேர்ந்த துளசி தாஸ், 43, பணிபுரிந்தார்.அக்., 4ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு கிளம்பிய போது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் துளசிதாஸ் பலியானார்; மற்றொரு ஊழியர் ராமுவுக்கு கையில் காயம் ஏற்பட்டது.துப்பாக்கி முனைஇந்நிலையில், ஸ்ரீபெரும் புதுார் அருகே பென்னலுார் கிராமத்தை சேர்ந்த இந்திரா, 55, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் பஸ்சுக்காக நின்றிருந்தார்.

அப்போது, வடமாநில வாலிபர்கள், துப்பாக்கி முனையில் இந்திராவிடம் இருந்து, 5 சவரன் தாலியை பறித்து தப்பினர். இந்திராவின் கூச்சல் கேட்டு, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள், வட மாநில வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களை நோக்கி, வடமாநில வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தினர். இதையடுத்து, அந்த வடமாநில வாலிபர்களை தேடும் பணியை, போலீசார் தீவிரப்படுத்தினர். அவர்கள் பதுங்கி இருந்தது ஏரி என்பதால், தேடுதல் வேட்டையில் சிரமம் ஏற்பட்டது.

அதனால், ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில், 10 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை நடந்தது. ஏரியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். புதர் மண்டிய பகுதி என்பதால், மூன்றுக்கும் மேற்பட்ட 'ட்ரோன்'கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர்.கூலி தொழிலாளிகள்நேற்று அதிகாலை 5:00 மணியளவில், புதருக்கு அடியில் இரண்டு பேர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவரை, தலைமை காவலர் மோகன்ராஜ் பிடித்தார்; அவரது கூட்டாளி தப்பினார். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையன் நயிம் அக்தர், 27, என தெரிய வந்தது.மேலும், தப்பிய கூட்டாளியான, ஜார்க் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்துஜா ஷேக், 30, ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் மதியம் 1:00 மணிக்கு முர்துஜா ஷேக்கை சுற்றி வளைத்தனர்.

அப்போது, தலைமை காவலர் மோகன்ராஜ் பிடிக்க முயன்றபோது, அவரை கத்தியால் வெட்டினார். தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் இரண்டு முறை சுட்டதில், முர்துஜா ஷேக்சம்பவ இடத்திலேயே பலியானார். இவர்கள் இருங்காட்டுகோட்டையில், கூலி தொழிலாளிகள் போல தங்கி, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. கொள்ளையர்களிடம் இருந்து, துப்பாக்கி, இரும்பு கம்பி, கொள்ளைக்கு பயன்படுத்தும் கருவிகள், 20க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., கார்டுகள், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார் கூறுகையில், ''கொள்ளையர்கள் இதற்கு முன் மூன்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து காவல் துறையிடம் தந்து உதவ வேண்டும்,'' என்றார்.


உலக நிகழ்வுகள்

குண்டு வெடிப்பில் பத்திரிக்கையாளர் பலி

கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஷாஹித் ஜெக்ரி, 35, என்ற பத்திரிகையாளர், ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு வேலைக்காக நண்பருடன் காரில் பயணித்தார்.அந்த காரை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காரில் இருந்த ஷாஹித் ஜெக்ரியும், அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். பின், அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.எனினும் பத்திரிகையாளர் ஷாஹித் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு 'பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி' என்ற தடை செய்யப்பட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


latest tamil news


பாலியல் வழக்கில் தப்பிய பிரிட்டன் இளவரசர்

லண்டன்-'பாலியல் புகாரில் சிக்கிஉள்ள இளவரசர் ஆன்ட்ரூ, 61, மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் போலீசார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டின், இளம் சிறுமியரை பிரிட்டனுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல புகார்கள் உள்ளன. இதற்காக பல நாடுகளில் இருந்து சிறுமியரை கடத்தி வந்து, அவர்களை வளர்த்து, பாலியல் விருந்து நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2019ல் அவர், நியூயார்க் சிறையில் தற்கொலை செய்தார். இந்நிலையில் எப்ஸ்டீன் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், பிரிட்டன் இளவரசர் ஆன்ட்ரூ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,

அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜினா கியூபர் என்ற பெண், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.பாலியல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து ஆன்ட்ரூவின் அரச உரிமைகளை, அவருடைய தாயும், பிரிட்டன் ராணியுமான இரண்டாம் எலிசபெத் பறித்தார். இந்நிலையில் எப்ஸ்டீன் மீதான விர்ஜினா கியூபரின் புகார் தொடர்பாக மறு விசாரணை முடிந்து விட்டதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும், பிரிட்டன் போலீஸ் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-202106:43:11 IST Report Abuse
Kasimani Baskaran இஸ்லாமிய பெயர் கொண்டவர்கள் அவர்கள் இருவரும். வங்க தேசத்தவர்களாகக்கூட இருக்கலாம்...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-202106:29:59 IST Report Abuse
Kasimani Baskaran ஓட்டுப்பெட்டியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட கட்சிக்காரர்களுக்கு தண்டனை கிடையாது - ஆனால் ஏவல்த்துறையில் உள்ள அடிமட்ட காவலர்களுக்கு தண்டனை. சக்கரா வியூகம் போல மூன்றடுக்கு காவலை உடைக்க எப்படி முடிந்தது? ஸ்காட்லாந்து யார்டு அளவுக்கு புகழ்பெற்ற காவல்த்துறைக்கு பெருத்த அவமானம். துப்பாக்கி சகிதம் காவல் இருப்பவர்கள் நாலு பேரை சுட்டுக்கொன்றிருந்தால் அடுத்தமுறை ஓட்டுப்பெட்டியை நெருங்க பயப்படுவார்கள். ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம் என்று சொன்னார்கள் என்பது பொதுமக்களுக்கு புரிந்திருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X