பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை தாறுமாறாக உயர்வு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : பண்டிகைகள் நெருங்குவதால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும் நாள்தோறும், 100 முதல் 120 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். சில நாட்களாக தக்காளி

சென்னை : பண்டிகைகள் நெருங்குவதால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.



latest tamil news



இங்கு உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும் நாள்தோறும், 100 முதல் 120 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. தற்போது 60 முதல் 80 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது.

இதனால், தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. செப்டம்பரில் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள், விரைவில் கொண்டாடப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருகிறது.


latest tamil news


இதனால், தக்காளி, வெங்காயத்தின் தேவை கணிசமாக அதிகரிக்கும். அதை மனதில் வைத்து, கிடங்குகளில் வெங்காயம் அதிக அளவில் பதுக்கப்படுகிறது. தக்காளி அறுவடையை விவசாயிகள் குறைத்துள்ளனர். இதனால், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, தக்காளி விலை உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
12-அக்-202116:49:30 IST Report Abuse
R S BALA இந்த தக்காளி விலை உயர்வால் விளைவிக்கும் விவசாயீ லச்சம் லாச்சமா சம்பாதிச்சிர போராணா .. வழக்கம் போல இடைத்தரகர் மஜா பண்னுவான் .. தக்காளி இல்லாம உயிர் வாழ முடியாதா.. பல்லு இருக்கறவன் தக்காளி திங்கட்டும் ..
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
12-அக்-202116:47:08 IST Report Abuse
Kumar ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றால் என்ன ஆகும்? எவனாவது வீட்டுக்கு முன்னால் மணலை கொட்டினாலே ,காசு கொடுனு ரவுடித்தனம் செய்வார்கள். இதுல என்ன பெருமை இருக்கு? காசு வாங்கி ஒட்டு போட்டாச்சு. இனி கொடுத்த காசை பிடுங்க என்ன வழி இருக்குனு இப்பவே திமுகாவினர் பிளான் போட்டு இருப்பார்கள். இனி விடியல் தான். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
ganesh - chennai,இந்தியா
12-அக்-202116:41:45 IST Report Abuse
ganesh ஜப்பான் நாட்டில் இது போல பொருட்கள் விலை உயர்வு கண்டால் மக்கள் அனைவரும் அந்த பொருட்களை புறக்கணிப்பார்கள் வாங்க மாட்டார்கள் அப்போ தானாகவே வியாபாரிகள் விலையை குறைப்பார்கள் முதலில் மக்களிடம் ஒற்றுமை வேண்டும் ஸ்டாலின் மோடி காரணம் இல்லை தேர்ந்தெடுத்த மக்கள் தான் காரணம் ஒற்றுமை இல்லாத மக்கள் தான் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X