பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு பயிற்சிக்கு மாதிரி பள்ளி ஏற்பாடு 80 மாணவர்களை சேர்க்க இலக்கு

Added : அக் 12, 2021
Share
Advertisement
அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதால் அரசுப் பள்ளி மாணவர்களை 2022ம் ஆண்டு நடக்கும் 'நீட்' தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியுள்ளது.முதற் கட்டமாக கல்வியில் பின் தங்கிய கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேசிய திறனாய்வு தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்

அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதால் அரசுப் பள்ளி மாணவர்களை 2022ம் ஆண்டு நடக்கும் 'நீட்' தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியுள்ளது.

முதற் கட்டமாக கல்வியில் பின் தங்கிய கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேசிய திறனாய்வு தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரை 'நீட்' தேர்வுக்கு தயார் படுத்த மாதிரி பள்ளிகள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் கடலுார் மாவட்டத்தில் கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 'நீட்' தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 2ம் தேதி துவங்கியது.

விருப்பத்தின் பேரில் மாணவர்கள் இங்கேயே தங்கி பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாதிரி பள்ளியில் பயிற்சி பெற விருப்பமுள்ள 80 மாணவ, மாணவியரை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், கடலுார், திட்டக்குடி, லால்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 பேர் முதற்கட்டமாக பயிற்சி பெறுகின்றனர். மீதமுள்ள 46 பேரின் பெயர் பட்டியல் வந்ததும் படிப்படியாக பயிற்சியில் சேர்க்கப்பட உள்ளனர்.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், '10க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த 15 ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு, 'நீட்' தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதனால் பொதுத் தேர்வு எழுத உள்ள மற்ற பிளஸ் 2 மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனை தவிர்க்க,ஒரு சில பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மற்ற பள்ளிகளிலும் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை உடனடியாக நிரப்ப கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X