உபகரணங்கள் வழங்காததால் துாய்மை பணியாளர்கள் அவதி 

Added : அக் 12, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காததால் ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகள், 361 தெருக்களில் 66 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் 100 பேரும், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் 97

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காததால் ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகள், 361 தெருக்களில் 66 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் 100 பேரும், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் 97 பேரும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக துாய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள், மண்வெட்டி, குப்பை அள்ளும் தகடு, பிரஷ் கட்டை, கத்தி, பாண்டு, அன்னக்கூடை, குப்பை அள்ள படல், கைகிளவுஸ், முககவசம் வழங்கவில்லை. தற்போது மழைக் காலம் துவங்க உள்ளது. பணியாளர்களுக்கான தளவாட பொருட்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X