பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் குளறுபடி கவர்னர் தலையிட அ.தி.மு.க., மனு

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'உள்ளாட்சி தேர்தலை, உரிய கால அவகாசம் வழங்கி, எவ்வித தவறும் இல்லாத வகையில் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கவர் னருக்கு அனுப்பியுள்ள மனு:புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உயர்நீதி மன்றத் தின் தீர்ப்பின் மூலம்

புதுச்சேரி : 'உள்ளாட்சி தேர்தலை, உரிய கால அவகாசம் வழங்கி, எவ்வித தவறும் இல்லாத வகையில் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கவர் னருக்கு அனுப்பியுள்ள மனு:புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உயர்நீதி மன்றத் தின் தீர்ப்பின் மூலம் திரும்பப் பெறப்பட்டது. இது மாநில அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 8ம் தேதி புதிய தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.2006ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் அடிப்படையில், 2011ம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மாநில தேர்தல் ஆணையம் நகராட்சிகள் மற்றும் பல கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் அட்டவணை வெளியிட்டிருப்பது தவறாகும்.அதேபோன்று, நகராட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கான இட ஒதுக்கீடு, சுழற்சி முறையில் கட்டாயம் இருக்க வேண்டும்.ஆனால், மாநில தேர்தல் ஆணையம் 2006 இட ஒதுக்கீட்டையே அறிவித்துள்ளது. இது உள்ளாட்சி தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பானது.புதுச்சேரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், 6 வார்டுகள் எஸ்.டி.,யினருக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், 4 வார்டுகள் மட்டுமே ஒதுக்கியிருப்பது சட்ட விரோதமானது.

புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தி.மு.க., - காங்., ஆளும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இன்றுவரை இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. அதனை மறைத்து, புதுச்சேரி மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.பண்டிகை காலங்களில் தேர்தல் அறிவித்திருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.எனவே, இவ்விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, முதல்வர், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் சட்ட வல்லுனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.எவ்வித தவறும் இல்லாத வகையில் உரிய கால அவகாசம் அளித்து, உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X