கிக் பாக்சிங் வீரர்கள் அமைச்சரி்டம் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிக் பாக்சிங் வீரர்கள் அமைச்சரி்டம் வாழ்த்து

Added : அக் 12, 2021
Share
புதுச்சேரி : தேசிய சீனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி வீரர்களை, அமைச்சர் நமச்சிவாயம், பாராட்டினார்.கோவா மாநிலம், மாபூசல் மாவட்டத்தில் தேசிய அளவிலான சீனியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. தேசிய கிக் பாக்சிங் பெடரேஷன் மற்றும் கோவா மாநில கிக் பாக்சிங் சங்கமும் இணைந்து நடத்திய இப்போட்டியில், 31 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த

புதுச்சேரி : தேசிய சீனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி வீரர்களை, அமைச்சர் நமச்சிவாயம், பாராட்டினார்.

கோவா மாநிலம், மாபூசல் மாவட்டத்தில் தேசிய அளவிலான சீனியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. தேசிய கிக் பாக்சிங் பெடரேஷன் மற்றும் கோவா மாநில கிக் பாக்சிங் சங்கமும் இணைந்து நடத்திய இப்போட்டியில், 31 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில் புதுச்சேரியை சேர்ந்த 13 வீரர்கள் கிக் பாக்சிங் சங்க தலைவர் இளங்கோவன் தலைமையில் பங்கேற்றனர்.புதுச்சேரி வீரர்கள் 5 தங்கம், வெள்ளி, வெண்கலம் தலா 2 என மொத்தம் 9 பதக்கம் வென்றனர். இவர்களில், போலீஸ் துறையை சேர்ந்த மோகன் இரண்டு தங்கப் பதக்கம் வென்றார்.தேசிய பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மோகன் உள்ளிட்ட வீரர்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X