கொரோனாவுக்கு 2 பேர் பலி 42 பேருக்கு தொற்று

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. காரைக்காலை சேர்ந்த இருவர் இறந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,022 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1,27,095 ஆக உயர்ந்துள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. காரைக்காலை சேர்ந்த இருவர் இறந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,022 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1,27,095 ஆக உயர்ந்துள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர், 63 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 1848 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 98 பேரும், லேசான பாதிப்புடன் வீட்டு தனிமையில் 541 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,24,608 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 53 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 1.39 சதவீதமாகவும், இறப்பு 1.45 சதவீதமாகவும் உள்ளது. குண மடைந்தோர் சதவீதம் 98.04 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X