பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் சேவை இயக்கத்தினருக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,பாராட்டு

Added : அக் 12, 2021
Share
Advertisement
நெய்வேலி : நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் துாய்மை பணிகளில் ஈடுபடும் மக்கள் சேவை இயக்கத்தினரை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பாராட்டினார்.வரும் நவ.1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கிராமப்புற அரசு பள்ளிகளில் நெய்வேலி மக்கள் சேவை இயக்கத்தின் சார்பாக பள்ளி கட்டடங்கள், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் துாய்மைப்படுத்தப்பட்டு

நெய்வேலி : நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் துாய்மை பணிகளில் ஈடுபடும் மக்கள் சேவை இயக்கத்தினரை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பாராட்டினார்.

வரும் நவ.1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கிராமப்புற அரசு பள்ளிகளில் நெய்வேலி மக்கள் சேவை இயக்கத்தின் சார்பாக பள்ளி கட்டடங்கள், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் துாய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார பழுது நீக்கி, விளக்குகள் அமைத்தும் கொடுக்கப்பட்டது. இவர்களது சேவை குறித்து தகவலறிந்த சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நெய்வேலி அடுத்துள்ள பேர்பெரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளிக்கு நேரில் சென்று அங்கு துாய்மை பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி கவுரவித்தார்.

மக்கள் சேவை இயக்க தலைவர் தாமரைச்செல்வன் தலைமையிலான திருநாவுக்கரசு, ராமமூர்த்தி, சங்கர், குமார், ஜெயக்குமார், சுந்தரவடிவேல், பரமேஸ்வரன், செந்தில்குமார், சசிகலா, வளர்மதி, தவமணி, சுதா, ராஜேஸ்வரி ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X