கிரைம் செய்திகள் - கடலூர்

Added : அக் 12, 2021
Share
Advertisement
பஸ் ஸ்டாப்பில் மது குடித்தவர் மீது வழக்கு புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்தில், பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூராக மதுக்குடித்த மேல்புவனகிரி திரவுபதியம்மன் கோவில் தெரு இளங்கோவன்,34; மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.லாரியில் சிக்கி தொழிலாளி பலி ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம்

பஸ் ஸ்டாப்பில் மது குடித்தவர் மீது வழக்கு

புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்தில், பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூராக மதுக்குடித்த மேல்புவனகிரி திரவுபதியம்மன் கோவில் தெரு இளங்கோவன்,34; மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

லாரியில் சிக்கி தொழிலாளி பலி

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுாரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதே ஊரைச் சேர்ந்த அமலநாதன், 55; சுமை துாக்கும் தொழிலாளியாக பணி புரிந்தார். நேற்று முன்தினம் இரவு அமலநாதன் மற்றும் தொழிலாளிகள் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகளை டாரஸ் லாரியில் ஏற்றினர். அப்போது மழை பெய்ததால் லாரியின் அடியில் கிடந்த தார்பாயில் அமலநாதன் துாங்கினார். மூட்டைகளை ஏற்றிய பின் லாரியை டிரைவர் நகர்த்தினார். இதில் அமலநாதன் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சுற்றிய இருவர் வழக்கு காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி நின்ற லால்பேட்டை கொத்தவால் தெரு ரியாஸ், 23; லால்பேட்டை கைக்காட்டி அருகே நின்ற காட்டுமன்னார்கோவில் சந்தைத்தோப்பு ஆசிரியர் காலனியைசய் சேர்ந்த வேங்கை மாறன், 28; ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

பயிரை நாசம் செய்த 3 பேர் மீது வழக்கு

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜ்,52; வரதராஜின் தம்பி ராமர், வயலில் பங்கு கேட்டு தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு ராமர் மகன் அசோக்,19, என்பவர் டிராக்டர் மூலம் வரதராஜின் வயலில் வளர்ந்திருந்த சோளப்பயிரை நாசம் செய்தார். தட்டிக்கேட்ட வரதராஜனை தர்மர், அவரது மனைவி அருந்தவம் ஆகியோர் மிரட்டினர். புகாரின் பேரில் தர்மர், அருந்தவம், அசோக் மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து அசோக்கை கைது செய்தனர்.

மின்னல் தாக்கி ஒருவர் பலி

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் இளந்திரை மேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 45; நேற்று அவரது வயலில் வேலை செய்தார். மாலை 5 மணியளவில் அப்பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் அருகில் உள்ள மரத்தின் ஓரம் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் அருகில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ், 22; காயமடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். கோவிலில் திருடிய இருவர் கைது சிதம்பரம்: சிதம்பரம் எஸ்.ஆர்.நகரில் சித்தி விநாயகர் கோவில் அர்ச்சகராக அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி, 45; பணி புரிகிறார். கடந்த 10ம் தேதி கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை 6 மணியளவில் கோவிலுக்கு வந்த போது, உள்பிரகாரத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சுவாமி சிலையின் மேல் இருந்த கலசம், இரு குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கோவில் பீரோவில் இருந்த கவரிங் நகைகள், பித்தளை அர்ச்சனை தட்டுகள் காணாமல் போயிருந்தது. புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து ஓமக்குளம் குமார், 49; பொன்னாங்கண்ணி மேட்டை சேர்ந்த கேசவன், 37; ஆகியோரை கைது செய்தனர்.மின்சாரம் தாக்கி ஒருவர் பலி குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் 48. நெய்வேலி என்.எல்.சி., தெர்மல் -இரண்டி-ல் சொசைட்டி ஊழியராக வேலை செய்தார்.

இவர், நேற்று மாலை வயலில் உள்ள அவரது வீட்டின் முன்புறம் விழுந்த மரத்தின் கிளையை அகற்றினார். அப்போது காற்று, மழை காரணமாக அறுந்து கிடந்த வீட்டின் மின் ஒயர் பட்டதில், கந்தவேல் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X