பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி நிறைவேற்றக்கோரி தர்ணா

Added : அக் 12, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி முன்னாள் கவுன்சிலர் தலைமையில் 30 பெண்கள் உள்ளிட்ட 60 பேர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதியான கவரப்பாளையத்தெரு, ஏ.எஸ்.ஆர். நகர்., உள்ளிட்ட பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.12 லட்சம் செலவில் சாலை அமைக்க டெண்டர்

புவனகிரி : புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி முன்னாள் கவுன்சிலர் தலைமையில் 30 பெண்கள் உள்ளிட்ட 60 பேர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதியான கவரப்பாளையத்தெரு, ஏ.எஸ்.ஆர். நகர்., உள்ளிட்ட பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.12 லட்சம் செலவில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்தனர். 11வது வார்டில் சாலை அமைக்க வேண்டும். குடிநீர் வசதி மற்றும் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே பிரச்னையை விரைந்து சரி செய்ய கோரி நேற்று காலை 10.00 மணிக்கு முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன் தலைமையில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விரைந்து சரி செய்வதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X