பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரச மரம் வெட்டி சாய்ப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாக இருந்த பழமையான அரச மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர்.நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டார வள மையம் ஆகியவை அருகருகே உள்ளன. இதன் நடுவில் பல ஆண்டுகளாக அரச மரம் பெரியதாக வளர்ந்துள்ளது. இதை மருத்துவமனை, நகராட்சி, கல்வித் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எந்த நேரத்திலும்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாக இருந்த பழமையான அரச மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர்.நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டார வள மையம் ஆகியவை அருகருகே உள்ளன.

இதன் நடுவில் பல ஆண்டுகளாக அரச மரம் பெரியதாக வளர்ந்துள்ளது. இதை மருத்துவமனை, நகராட்சி, கல்வித் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எந்த நேரத்திலும் மருத்துவமனை மீது விழும் அபாயம் இருந்ததால் நோயாளிகள் அச்சத்துடனேயே வந்து சென்றனர். மருத்துவமனையை தரம் உயர்த்த பார்வையிட வந்த சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியத்திடம் நோயாளிகள் புகார் அளித்தனர்.

உடனடியாக மரத்தை வெட்டி அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நேற்று அந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தும் பணியை துவக்கியதால் நோயாளிகள் நிம்மதியாக மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X