பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., 50ம் ஆண்டு துவக்க விழா

Added : அக் 12, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : வரும் 17ம் தேதி அ.தி.மு.க., 50ம் ஆண்டு துவக்க விழாவில், கடலுார் மேற்கு மாவட்டம் முழுவதும் எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடலுார் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அறிக்கை: வரும் 17ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, முன்னாள் முதல்வர் ஜெ., காப்பாற்றிய அ.தி.மு.க.,வின் 50ம் ஆண்டு துவக்க விழாவை,

விருத்தாசலம் : வரும் 17ம் தேதி அ.தி.மு.க., 50ம் ஆண்டு துவக்க விழாவில், கடலுார் மேற்கு மாவட்டம் முழுவதும் எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அறிக்கை: வரும் 17ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, முன்னாள் முதல்வர் ஜெ., காப்பாற்றிய அ.தி.மு.க.,வின் 50ம் ஆண்டு துவக்க விழாவை, கடலுார் மேற்கு மாவட்டம் சார்பில் விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி ஆகிய சட்டசபை தொகுதிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.எத்தனையோ தியாகங்கள், போராட்டங்களால் கட்சி இன்றும் வலிவோடும், பொலிவோடும் வெற்றி நடை போடுகிறது.

ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளைகளில் கட்சி கொடியேற்றி, இனிப்பு, அன்னதானம் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.மேலும், எம்.ஜி.ஆர்., ஜெ., திருஉருவச்சிலைகள் அல்லது படங்களுக்கு மாலையணிவித்து, மரியாதை செய்து எழுச்சியோடும், சிறப்போடும், குறிப்பாக கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தும் கொண்டாடவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X