மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

Added : அக் 12, 2021
Share
Advertisement
காரைக்கால் : மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.காரைக்கால், கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்; தச்சு தொழிலாளி. இவரது மாமியார் அபிராமி(80). இவர் நேற்று முன்தினம் மகள் இளஞ்சியத்துக்கு உதவியாக கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற இளஞ்சியம் மீதும்

காரைக்கால் : மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

காரைக்கால், கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்; தச்சு தொழிலாளி. இவரது மாமியார் அபிராமி(80). இவர் நேற்று முன்தினம் மகள் இளஞ்சியத்துக்கு உதவியாக கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற இளஞ்சியம் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளஞ்சியம் சிகிச்சையில் உள்ளார். கோட்டுச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X