கதண்டு அழிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கதண்டு அழிப்பு

Added : அக் 12, 2021
Share
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை மெயின்ரோடு வெல்கம் நகரில் உள்ள, பனை மரத்தில் கதண்டு கூடுகட்டி அந்த வழியாக செல்வோரை கடித்து அச்சுறுத்தியது. இப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பரங்கிப்பேட்டை தீயைணப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு வீரர்கள் ரமேஷ்,ஜெயராமன்,

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை மெயின்ரோடு வெல்கம் நகரில் உள்ள, பனை மரத்தில் கதண்டு கூடுகட்டி அந்த வழியாக செல்வோரை கடித்து அச்சுறுத்தியது.

இப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பரங்கிப்பேட்டை தீயைணப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு வீரர்கள் ரமேஷ்,ஜெயராமன், ராஜ்குமார், ஏழுமலை, தவான் உள்ளிட்ட வீரர்கள், பனை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டை அழித்தனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X