பொது செய்தி

இந்தியா

தேர்தல் நன்னடத்தை விதிகளை திரும்பப் பெற தி.மு.க., கோரிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகளை திரும்பப் பெற வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவால் உயர்நீதி மன்றத்தால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தனது தவறை திருத்திக் கொள்ள கால அவகாசம் எடுத்துக்கொண்டு, மக்கள்

புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகளை திரும்பப் பெற வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவால் உயர்நீதி மன்றத்தால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தனது தவறை திருத்திக் கொள்ள கால அவகாசம் எடுத்துக்கொண்டு, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி தேர்தல் நடத்த முன்வர வேண்டும். மாநில அரசும், தேர்தல் ஆணையத்தை அழைத்து உரிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும்.பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மீனவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டிய பணி நிலுவையில் உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அரசின் மூலம் சலுகைகள் கிடைக்க வேண்டியுள்ளது. பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் மாநில தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து, கவுரவம் பார்க்காமல் தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப்பெற வேண்டும். இதுகுறித்து கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X