பொது செய்தி

தமிழ்நாடு

பவானி மசாலா நிறுவனத்தில் ஏற்றுமதி தினம் கொண்டாட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
கடலுார் : புதுச்சேரி முள்ளோடையில், பவானி மசாலா நிறுவனம் சார்பில் ஏற்றுமதி தினம் கொண்டாடப்பட்டது.புதுச்சேரி இளம் தொழில் முனைவோர் மையத்தின் தலைவர் பிரொபஷனல் கூரியர் சிவா தலைமை தாங்கி, ஏற்றுமதியின் முக்கியத்துவம், தரம் மற்றும் உற்பத்தியின் சிறப்பு, தொழிலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.பவானி அம்மாள் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பொன்

கடலுார் : புதுச்சேரி முள்ளோடையில், பவானி மசாலா நிறுவனம் சார்பில் ஏற்றுமதி தினம் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி இளம் தொழில் முனைவோர் மையத்தின் தலைவர் பிரொபஷனல் கூரியர் சிவா தலைமை தாங்கி, ஏற்றுமதியின் முக்கியத்துவம், தரம் மற்றும் உற்பத்தியின் சிறப்பு, தொழிலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.பவானி அம்மாள் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பொன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் மற்றும் இயக்குனர் ஜோதிலட்சுமி ஜெய்சங்கர் செய்திருந்தனர்.தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்கள், அதிக நாட்கள் வேலைக்கு வந்தவர்கள், திறமையின் அடிப்படையில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இளம் தொழில் முனைவோர் மைய துணைத் தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலாளர் தாமரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார். நிறுவன மேற்பார்வையாளர் கனிமொழி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X