பழங்குடி மக்கள் கூட்டமைப்பு எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பழங்குடி மக்கள் கூட்டமைப்பு எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி

Added : அக் 12, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடந்தது.கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,இக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடந்தது.கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,இக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பினை வாபஸ் பெற்ற மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் கவர்னரை சந்தித்து, உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X